கடந்த ஆண்டு வரை சீனாவின் பேச்சை கேட்டு இந்தியாவுடன் மல்லுக்கு நின்ற நேபாளம் இப்பொழுது அன்டை நாடுகளில் இந்தியாவுக்கு தான் முதல் மரியாதை இதை சீனாவுக்கு அளிக்க முடியாது என்று பகிங்கரமாக அறிவித்து இருக்கிறது.
நேபாளத்தில் சீனாவினால் உருவாக்க ப்பட்ட கம்யூனிஸ்ட் அரசை கவிழ்ப்பது எ வ்வளவு பெரிய விசயம் தெரியுமா?அது
வும் சீனாவின் செல்ல பிள்ளையான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வைத்து கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்த்து மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் இந்தியாவுக்கு ஆதரவான நேபாள காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
அனைத்தையும் சாதித்து இருக்கிறார் நரேந்திரமோடி..
நேபாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்த்து இந்தியாவுடன் நீண்ட காலமாக நட்புடன் இருக்கும் நேபாள காங்கிரஸ் த
லைமையில் புதிய ஆட்சியை கொண்டு வந்து மீண்டும் இந்தியா நேபாளம் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்திய
மோடி அவர்களுக்கு வாழ்த்துகள்.
சித்தாந்த ரீதியாக சீனாவுடன் பின்னிபிணைந்து இருக்கும் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேபாள மா ர்க்சிஸ்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் கூட்டணி அமைத்து 2017 நேபாளநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சியை அமைத்தது.
நேபாள ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தலைவரான சர்மா ஒலி பிரதமரானார்.இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்களே சீனாவுக்கு ஆதரவாக இருக்கும் பொழுது நேபாள கம்யூனிஸ்ட் அரசு மட்டும் எப்படி இந்தியாவுடன் நட்பாக இருக்க முடியும்?
நாள் தோறும் இந்தியாவுடன் நேபாளம் வம்பு இழுத்து கொண்டு இருந்தது. நேபாளத்திற்கான சீனத்தூதரான யாஞ்சி
என்கிற பெண்மணியின் கஸ்டடியில் தான் நேபாள பிரதமராக இருந்த ஷர்மாஒலி இருந்தார்.
இதனால் ஷர்மா ஒலி சீனாவின் சொல்பேச்சைக் கேட்டு இந்தியாவுடன் தொடர்ந்து வம்பு இழுத்து வந்தார்.நேபாள ஆட்சி கம்யூனிஸ்ட்களின் கைகளில் இருந்ததால் நேபாளம் கம்யூனிஸ்ட் நாடான சீனாவுடன் தானே நெருக்கமாக இருக்க
முடியும்.
இதை அறிந்தும் அரைவேக்காடு அரசியல் வாதிகளும் மீடியாக்களும் நேபாளத்தி ல் இந்தியா தன்னுடைய பிடியை இழந்துவிட்டது என்று ஒப்பாரி வைத்தார்கள் இப்படி ஒப்பாரி வைத்த மீடியாக்கள் யார் தெரியுமா?
2008 ல் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி ஆட்சியை பிடித்த பொழுது ஆஹா..இதுவல்லவா மக்கள் புரட்சி என் று புளங்காகிதம் அடைந்து நேபாளத்தை பாராட்டி நின்ற அரைவேக்காடு அரசியல்.
வாதிகளும் மீடியாக்களும் பல தசாப்தங்களாக இந்தியாவின் கைப்பாவையாக இருந்த நேபாள காங்கிரஸ் ஆட்சி மாறிய பொழுது அப்போதைய மன்மோகன் சிங் ஆட்சியை பார்த்து இது இந்தியாவின் தோல்வி என்று யாரும் கூறவில்லை.
மாறாக நேபாளத்தில் மன்னர் ஆட்சி ம றைந்து ஜனநாயகத்தின்எழுச்சி ஆரம்பம் என்றார்கள்.நேபாளம் இந்து நாடல்ல
மதசார்பற்ற நாடு என்று கம்யூனிஸ்ட் அரசுகள் கூறிய பொழுது நேபாளத்தில் புதிய விடியல் ஆரம்பம் என்றார்கள்.
இதையடுத்து கம்யூனிஸ்ட் அரசுகள் நேபாள அரசியமைப்பு சட்டத்தை திருத்தி இந்திய வம்சாவளியினர்களான மாதேசி
களின் அரசியல் அங்கீகாரத்தை பறிக்க நினைத்தார்கள்.இந்திய மீடியாக்கள் கம்யூனிஸ்ட் அரசுகளை பாராட்டி நின்றது
ஆனால் இந்திய வம்சாவளியினர்களின் உரிமை பறிக்கப்பட்டவுடன் மோடி அரசு நேபாளத்தில் உள்ள இந்திய வம்சாவளி மாதேசி அரசியல் தலைவர்களை டெல்லிக்கு வர வைத்து அவர்கள் தலைமையில் இந்திய நேபாள எல்லைகளில் மாதேசி மக்களை போராட வைத்து நேபாள த்திற்க்கு இந்தியாவில் இருந்து எந்த பொருட்களும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
பதிலுக்கு சீனாவில் இருந்து நேபாளத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்தார்கள்.ஆனால் முடியவில்லை எப்படி முடியும்?
200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பொருட்கள் செல்வது நல்லதா? இல்லை 3000
கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீனா வில் இருந்து பொருட்கள் செல்வது சாத்தியமா?
மாதேசிகளை வைத்து மோடி அரசு உரு வாக்கிய பொருளாதார தடையினால் நேபாளத்தில் உருவான உள் நாட்டு கல
வரத்தினால் பயந்து போன நேபாள அரசுநேபாள அரசியல். சாசன சட்டத்தை திருத்தி மறுபடியும் இந்திய வம்சாவளியினர்களான மாதேசிகளுக்கு மறுபடியும் அரசியல் அதிகாரம் கிடைத்தது
ஆனால் இந்திய மீடியாக்களும் அரை வேக்காடு அரசியல்வாதிகளும் மோடி ஒரு
கொடுங்கோலர் என்று நேபாளத்தில் உள்ள கம்யூனிஸ்ட்கள் கூறியதை இங்கே வெளியிட்டு இரக்கமற்ற மோடியினால் நேபாள மக்கள் படும் துயரங்களை பாருங்கள் என்றார்கள்.
பாருங்கள் இந்திய வம்சாவளியினர்களின் அரசியல் உரிமையை நேபாள கம்யூனிஸ்ட் அரசுகள் பறித்த பொழுது வேடிக்கை பார்த்த இந்திய மீடியாக்கள் அதை மோடி அரசு மீட்ட பொழுது மோடி இரக்கமற்றவர் கொடுங்கோலர் என்று கூறி மகிழ்ந்தன்.
மோடி மீட்டு கொடுத்த மாதேசிகளின் அரசியல் உரிமையினால் தான் இப்பொழுது நேபாளத்தில் கம்யூனிஸ்ட்களினா ல் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியவில்லை. ஏனென்றால் 275 உறுப்பினர் களை கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர்கள் 34 பேர் எம்பிகளாக இருக்கிறார்கள்.
இந்த 34 எம்பிக்கள் மற்றும் 67 நேபாள காங்கிரஸ் எம்பிக்களுடன் தான் இப்போதைய நேபாள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி
இருக்கிறது. இதனால் தான் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா இந்தியா தான் எங்களின் முதல் நண்பன்.சீனா கிடையாது என்று கூறி இருக்கிறார்.
நேபாளத்தில் இனி அடுத்து வருவது எந்த ஆட்சியாக இருந்தாலும் அதில் இந்தியா வின் ஆதிக்கம் வலுவாக இருக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார் .குறிப்பாக இந்திய வம்சாவளியினர்களின் கைகளில் நேபாளத்தின் அதிகாரம் இருக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார்.
அதனால் தான் இதுவரை திசைக்கு ஒரு பக்கமாக அரசியல் செய்து வந்த இந்திய வம்சாவளியினர்களின் அரசியல் கட்சிகளான சமாஜ்வாடி பார்ட்டி மற்றும் ராஷ்டி ரியஜனதா பார்ட்டி ஆப் நேபாள் என்று இரண்டு கட்சிகளையும் இணைய வைத்து ஜனதா சமாஜ்வாடி பார்ட்டி என்கிற புதிய கட்சியை கட்சியை உருவாக்கி இருக்கிறார்.
இதன் மூலமாக நேபாள பாராளுமன்ற த்தில் 34 உறுப்பினர்களை கொண்டு இந்தியாவின் வம்சாவளியினர்களின்
அரசியல் பிரதிநிதிகள் நான்காவது இடத்திற்கு வந்து விட்டார்கள்.இனி வரும் நேபாள தேர்தலில் ஒன்றிணைந்த மாதே
சிகளினால் நிச்சயமாக 60-70 எம்பிக்களை பெற முடியும்.
2017 நேபாள பாராளுமன்ற தேர்தலில் சீனாவின் ஆலோசனையினால் கூட்டணி வைத்து போட்டியிட்ட ஷர்மா ஒலி யின் நேபாள மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பிரசந்தாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ஆனால் கடந்த ஆண்டு இந்தியாவின் தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாவோயி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான
பிரசந்தாவை சாமர்த்தியமாக இந்திய ஆதரவு நிலைக்கு கொண்டு வந்து இரண்டு நேபாள கம்யுனிஸ்ட் கட்சிகளிடையே
பிளவை உண்டாக்கி ஷர்மாஒலி அரசில் கூட்டணி கட்சியாக இருந்த நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை வாபஸ் பெற வைத்து ஷர்மா ஒலி யின்ஆட்சியை தூக்கி வீசி விட்டார் மோடி.
இனி வரும் காலங்களில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைப்பது கஷ்டம் தான்.ஏனென்றால் அந்த அளவிற்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடை யே முட்டல் மோதல் அடி தடி சண்டைகளை உருவாக்கி பிளவை ஏற்படுத்தி இருக்கிறது இந்தியாவின் ரா அமைப்பு.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இனி வருகின்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை என்றால் நேபாளத்
தில் மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை.இந்தியாவின் ஆதரவுபெற்ற நேபாள காங்கிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியினர்களின் ஆட்சி தான்.
நேபாள காங்கிரஸ் ஆட்சியை வைத்து மீண்டும் நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வைப்பார் மோடி.இது நிச்சயமாக
நடைபெறும்.இதற்கான முன்னோட்டம் தான் நேற்று நேபாள அரசு அறிவித்து ள்ள இந்தியா தான் எங்களின் முதல் நண்பன் சீனா அல்ல என்கிற வாய்ஸ்.
வாழ்த்துகள்பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களே.
கட்டுரை:-வலதுசாரி சிந்தனை யாளர் விஜயகுமார் அருணகிரி.