சீனா பாகிஸ்தானுக்கு அடுத்த அப்பு ஜோசிலா சுரங்கப்பாதை பணியை தொடங்கும் மோடியரசு.
மோடியரசு தொடந்து நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்திவருக்கென்றது.
இதன் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜோசிலா சுரங்கப்பாதை தோண்டும் பணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைக்கிறார்.
இந்த சுரங்கப்பாதை ஸ்ரீநகர் மற்றும் லே இடையே தேசிய நெடுஞ்சாலை எண் -1-ல் எல்லா பருவ நிலையிலும் செல்லக்கூடிய போக்குவரத்தை ஏற்படுத்தும் மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இடையே பொருளாதார வளர்ச்சி, சமூக-கலாச்சார ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். ஜோஜிலா கணவாய்க்கு கீழ் 3000 மீட்டருக்கு கீழ் 14.15 கி.மீ தூரத்துக்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. தற்போது இப்பகுதியில் உள்ள தேசிய நெடுங்சாலை 1-ல் ஸ்ரீநகர் மற்றும் லே இடையே ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே போக்குவரத்து நடக்கும். மீத 6 மாதங்களுக்கு பனி படர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்படும். உலகிலேயே மிக அபாயகரமான சாலையில் இதுவும் ஒன்று.
இத்திட்டம் மத்திய சாலை போக்குவரத்து துறை தலைமை இயக்கனர் ஐ.கே. பாண்டே தலைமையிலான நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுரங்கப்பாதை நிபுணர்களுடன் ஆலோசித்து தாக்கல் செய்யப்பபட்ட அறிக்கைக்கு கடந்த மே மாதம் மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து இந்த சுரங்கப் பணியை மெகா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. ரூ. 4509. 50 கோடி மதிப்பில் இந்த பணி டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதை தோண்டும் பணியை மத்தியமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து கருத்து கூறிய அரசியல் பிரமுகர் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ளது.நாட்டிற்கு எதாவது உதவ வேண்டுமானால் இந்த சுரங்க பாதை மிகவும் உதவிகாரமாகி இருக்கும் என்கின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















