ஐ.நா அவையில் மோடி பேசியது உலக செய்தியாகின்றது
சீனாவுடன் மோதல் வலுத்துள்ள நிலையில் மோடி அதை எழுப்புவார் என எதிர்பார்த்த நிலையில் அது ஒரு சிக்கலே அல்ல, லடாக் எல்லை எம் பகுதி என்பது போல் அமைதியாக கடந்துவிட்டார் மோடி
“நாம் பலவீனமான நிலையில் பயந்ததுமில்லை, வலுவான நிலையில் வலுசண்டைக்கு போவதுமில்லை” என தேர்ந்தெடுத்து மோடி பேசிய வார்த்தைகள் உலக அரங்கில் வரவேற்பை பெற்றிருக்கின்றது
1962ல் இந்தியாவிலும் நிலமைசரியில்லை, உலக அரங்கிலும் நிலமை சரியாக இல்லை.
இந்தியாவில் அப்பொழுது நேரு பிரதமராக இருந்தார். உண்மையில் பாசிசம் சர்வாதிகாரம் என்றால் என்ன என்பதற்கு நேருதான் உதாரணம்
வெளியில் ஜனநாயகவாதி, மனிதருள் மாணிக்கம் என்றெல்லாம் பட்டம் இருந்தாலும் உள்ளூர அவர் மிகபெரிய சர்வாதிகாரி
இந்திரா அந்த சர்வாதிகாரத்தை நேருவிடம் இருந்துதான் படித்தார்.
1962 குழப்பங்களுக்கெல்லாம் காரணம் கிருஷ்ணமேனன் எனும் குழப்பவாதி, அவரின் தலையீடும் சண்டை பற்றி கொஞ்சமும் அறியாத அகம்பாவம் பிடித்த அவரின் அணுகுமுறையே யுத்த தோல்விக்கு முதல் காரணம்
இவர் அன்று பாதுகாப்புதுறையில் மகா முக்கிய இடத்தில் இருந்தார், ஒரே தகுதி நேருவின் நண்பர்
ஜெயலிதாவுக்கு சசிகலா போல இருந்த கிருஷ்ணமேனன் எனும் தனி நபருக்காக நாட்டுக்கு பெரும் இழுக்கை கொண்டுவந்தார் நேரு
நிச்சயம் அந்த இடம் சாஸ்திரிக்கு செல்ல வேண்டியது, ஆனால் நேரு இருந்தவரை சாஸ்திரியினை தள்ளியே வைத்திருந்தார், இதுதான் நேரு காத்த ஜனநாயகம்
நேரு செய்த இன்னொரு தவறு திறமையான ராணுவ அதிகாரிகளுடன் மோதி விலக்கி வைத்தது
திம்மையா, மானெக்சா போன்றோர் அன்று விரட்டியடிக்கபட்டு கவுல் என்பவர் முன்னிறுத்தபட்டார். அவர் ராணுவத்தில் இருந்தவர் ஆனால் அனுபவமும் இல்லை திறமையும் இல்லை
ஆனால் ஒரே தகுதி அவர் காஷ்மீரத்தார், நேருவின் தூரத்து சொந்தம். விளைவு அவர் இந்திய படைகளின் தலமை தளபதி ஆனார்
அன்று இந்திய ராணுவம் சீன அளவுக்கு வலுஇல்லை என்பதும். குளிர் ஆடை கூட இல்லாமல் சாலையே இல்லா 16 ஆயிரம் அடி உயர சிகரத்தில் டாங்கி சகிதம் நிற்கும் சீனாவினை சந்திக்க முடியாது என்பதும் ராணுவம் அஞ்சிய உண்மை
அதை ஏற்க நேருவோ, கவுலோ, கிருஷ்ணமேனனோ தயாராக இல்லை., வீண் பிடிவாதத்தில் இருந்தனர்
இப்பக்கம் உலக அரங்கில் கம்யூனிச ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இந்தியா தத்தளித்தது, ரஷ்யாவும் சீனாவும் ஒருங்கிணைந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதால் அமெரிக்காவுடன் இணைய தயங்கினார் நேரு
ஆனால் அமெரிக்காவுடன் இணைந்திருந்தால் ஒன்றும் குடி முழுகியிருக்காது, நிச்சயம் சீனாவினை அடித்திருக்கலாம். ரஷ்யா அப்படி ஒன்றும் களத்துக்கு வந்திருக்காது
அணிசேரா நாடுகள் தங்களை காக்கும், பாகிஸ்தானுக்கு ஆதரவான தன்னை இஸ்லாமிய நாடுகள் காக்க்கும் என நம்பினார் நேரு
உச்சமாக சீனாவுக்கு ஐ.நாவில் இந்திய ஆதரவு தேவை என்பதால் சீனா திருப்பி தாக்காது என கணக்கிட்டார்.
விளைவு அவரின் சர்வாதிகாரம், மேனனின் அகம்பாவம், கவுலில் முட்டாள்தனம் எல்லாம் சேர்ந்து அந்த பெரும் படுதோல்வியினை கொடுத்தது
அன்று சீனா முன்னேறி கொண்டிருந்தது, யாரையும் மதிக்காத நேரு கடைசி நேரம் அணி சேரா நாடுகள் தன்னை கைவிட்டதை எண்ணி அதிர்ந்தார்
இஸ்லாமிய நாடு ஒன்று கூட இந்தியா பக்கம் இல்லை
ரஷ்யா ஒரு கட்டத்தில் ஒதுங்கியது, ஆனால் நேருவின் ரகசிய கோரிக்கைக்கு ஏற்ப அமெரிக்க விமானபடை விரைந்து கொண்டிருந்தது, கென்னடி அந்த துணிச்சலை செய்தார்
(இவை பின்னாளில் வெளியிடபட்ட விஷயம், இந்திய காங்கிரஸ் இதை ஒப்புகொள்ளவில்லை)
அமெரிக்க தலையீட்டுக்கு பின் சீனா ஒருதலைபட்சமாக போரை நிறுத்தியது, அதே நேரம் ஆயுதம் வலுவில்லா நிலையில் சீக்கியரும் , ராஜ்புத் பிரிவினரும் நிகழ்த்திய மாபெரும் வீரபோர் சீனருக்கே வியப்பை கொடுத்ததும் நிஜம்
இப்படி நேரு எனும் குழப்பவாதி தன் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இருந்த இடைவெளியினை உணர்ந்து கலங்கியபொழுது தேசம் நேருவுக்கு எதிராய் பொங்கிற்று
பிறந்ததில் இருந்து கவுரவமாக வளர்ந்து, இந்திய சர்வாதிகாரியாய் நின்ற நேருவுக்கு சோதனைகள் ஆரம்பமாயின
தேசம் முழுக்க நாட்டுபற்று பொங்கியது, ரத்த கையெழுத்து குவிந்தது, நாடெல்லாம் பதுங்கு குழி அமைப்போம் யுத்தம் தொடர்வோம் எனும் கோஷங்கள் பொங்கின
கவுலும் கிருஷ்ணமேனனும் பதவி விலக கோரிகைகள் எழுந்தன
சசிகலாவினை காக்கும் ஜெயா போல கிருஷ்ணமேனனுக்கு ஆதரவாய் நின்றார் நேரு, உச்சமாக மேனன் நீக்கபட்டால் நானும் நீங்குவேன் என காங்கிரஸையே மிரட்டினார்
ஆனால் காங்கிரஸின் சில குரல்களே “தயவு செய்து ராஜினாமா செய்யுங்கள் நேரு” என சொல்ல அதிர்ந்து நின்றார் நேரு
நாடெல்லாம் இருந்த எழுச்சியில் அவருக்கு எதிர்ப்பு வலுத்தது. பத்திரிகையும் அரசியலும் நேருவினை மகா மகா கொடுமையாக விமர்சித்தன
அரசியலில் தன் கோரமுகத்தினை காட்ட ஆரம்பித்தது அந்த சமாதான புறா.
தன் சீன தோல்வியினை மறைக்க உள்நாட்டு சிக்கலை தூண்டிவிட்டது, பல போராட்டம் எழும்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் இங்கு உச்சத்துக்கு வந்தது
சீன தோல்வியில் இருந்து கவனத்தை திசைதிருப்ப திராவிட கோஷ்டி உள்பட பல கோஷ்டிகளிடம் போராட தொடங்கினார் நேரு
உண்மையில் தமிழக இந்தி எதிர்ப்பு வெறும் பூச்சாண்டி. ராம்சாமி கருணாநிதி அண்ணா என சிலரை பிடித்து திகாரில் அடைத்திருந்தாலே விஷயம் முடிந்திருக்கும்
அன்று திமுக பெரிய கட்சி எல்லாம் அல்ல, அழகாக முளையிலே கிள்ளியிருக்கலாம்
ஆனால் சீன தோல்வியினை மறைக்க இதையெல்லாம் அனுமதித்தார் நேரு, ஆம் அதில்தான் இங்கு இந்த பெரும் கிளர்ச்சி வந்து எல்லாம் நாசமானது, அத்தோடு நேரு மறைந்தார்
அடுத்து வந்த சாஸ்திரி நேரு செய்த தவறை எல்லாம் திருத்தினார். ராணுவத்தை பலபடுத்தி மானெக்சா, திம்மையா என உண்மையான ஹீரோக்களை தகுதி அடிபபடையில் கொண்டுவந்தார்
அதில்தான் 1965ல் அதாவது சீனாவுடன் தோற்ற 3 வருடத்திலே பாகிஸ்தானுடம் பெரும் வெற்றி பெற்றது இந்தியா
சாஸ்திரி தலமையில் இந்தியா சீறி எழுவதை கண்டு அஞ்சிய ரஷ்யா அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது, அங்கு சீறி நின்றார் சாஸ்திரி. அமெரிககவோ யாரோ ரஷ்யாவோ யார் உதவி என்றாலும் ஏற்போம் ஆனால் அஞ்ச மாட்டோம் போரை நிறுத்தமாட்டோம் என அவர் சொன்ன பொழுது தாஷ்கண்டில் ரஷ்யாவே திகைத்தது
அன்றே மர்மமாக இறந்தார் சாஸ்திரி
பின் இந்திரா வந்தார் அதேவலுவான ராணுவத்தோடு வங்கத்தை பிரித்தார், மானெக்சா பெரும் ஹீரோவானார்
வரலாறெங்கும் படியுங்கள், இந்திய ராணுவம் தன் திறமையின்றி தோற்கவில்லை மாறாக சரியான தலைவன் இல்லாமலே , அரசின் ஒத்துழைப்பு இல்லாமலே தோற்றது
நேரு அதில் முக்கியமானவர், அடுத்து அவரின் பேரன் ராஜிவ்
ஆம், ஈழத்தில் அவர் அப்படித்தான் குழப்பி இந்திய ராணுவத்துக்கு அவமானம் தேடிதந்தார். பிரபாகரனை அரைநாளிலே தூக்கும் வலு இருந்தும் ராஜிவால் 1500 ராணுவ வீரர்கள் உயிர் போனது
இப்பொழுது காலம் திரும்பிவிட்டது, சாஸ்திரி மோடி வடிவில் திரும்பிவிட்டார்
மானெக்சாவினை ஒதுக்கிவிட்டு கவுல் போன்ற ஜால்ராக்கள் இருந்த இடத்தில் விபின் ராவத் கம்பீரமாக லடாக்கில் நிற்கின்றார்
கிருஷ்ணமேனன் போன்ற அரைவேக்காடுகள் இருந்த இடத்தில் இன்று ராஜ்நாத்சிங் நிற்கின்றார்
அன்று அணிசேரா கொள்கை என இழுத்தடித்த வெளியுறவு துறையில் இன்று எந்த அணி இந்திய நலனுக்கு உகந்ததோ அதில் இருப்போம் என ஜெய்சங்கர் வெளிபடையாக நாம் அமெரிக்க அணி என்கின்றார்
அன்று இஸ்ரேலிடம் ஆயுதம் பெற்றால் இஸ்லாமிய நாடுகள் கைவிடும் என யோசித்தார் நேரு, கடைசியில் ஆயுதம் வாங்காமலே அவை கைவிட்ட பின்புதான் அவருக்கு சுட்டது
இன்று மோடி அமெரிக்கா முதல் இஸ்ரேல் வரை நவீன ஆயுதங்களை குவித்து வைத்திருகின்றார்
முன்பு சீன எல்லையினை அடைய இந்தியாவுக்கு சில நாட்கள் ஆகும் , கழுதையும் ஆட்களுமே ஆயுதம் ஏந்தி நடப்பார்கள், வான்வழி ஒன்றே உணவு சப்ளை
பீரங்கியெல்லாம் கொண்டு செல்ல முடியாது
இப்பொழுது மோடி அரசு மிகபெரிய சாலை வசதி, தொலை தொடர்பு வசதியெல்லாம் செய்து 3 மணி நேரத்துக்குள் எல்லையினை அடையும் படி செய்திருக்கின்றது
இந்திய பீரங்கிகள் அங்கு நிறுத்தபட்டிருக்கின்றன, பாங்கோ ஏரியில் இந்திய படகுகள் சீறி நிற்கின்றன
இந்திய ராணுவம் ஒரு முடிவோடு நிற்கின்றது, எந்த நிலையிலும் அவர்கள் விட்டு கொடுக்க தயாரில்லை
1962 போல் அல்லாமல், அதாவது அப்பொழுது நேரு வலிய சென்று சிக்கியது போல் இந்தியா மோடி காலத்தில் சிக்கவில்லை மாறாக ஜின்பெங்கின் வம்புக்கு பதிலடி கொடுத்து காத்து நிற்கின்றது
ஆக 1962ல் இருந்த நிலையில் இருந்து முற்றும் மாறி பலமான நிலையில் லடாக்கில் நின்றுகொண்டிருக்கின்றது.
அந்த பலமான நிலையில் மோடி சொல்கின்றார், அட்டகாசமான வார்த்தை அது. மிக நிதர்சனமான உண்மையும் கூட
“இந்தியா பலவீனமான நிலையில் பயந்ததுமில்லை, வலுவான நிலையில் வம்பு சண்டைக்கு செல்வதுமில்லை”
மோடியின் பேச்சு ஐக்கியநாடுகள் அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் என கோட்டிட்டு காட்டின..
கட்டுரை: வலதுசாரி எழுத்தாளர் ஸ்டாலின் ராஜன்.