பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி: பா.ஜ., – அ.தி.மு.க தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு?

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நேற்று தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், சி.டி.ரவி முற்றுப்புள்ளி வைத்தார்.

தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., -பா.ம.க., – தே.மு.தி.க.,- த.மா.கா., மற்றும்- புதிய நீதிக்கட்சி இடம் பெற்றன. கடந்த 2020 நவம்பரில், சென்னையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியை உறுதி செய்தனர்.

தாத்தா இறந்ததாக சொல்லி ஓசி குவாட்டர்காக பிச்சை எடுத்து போராடும் திருமாவளவனின் அடங்கமறுத்த தம்பிகள்

வரும் 18 ம் தேதி முதல்வர் பழனிசாமி, டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அரசியல் ரீதியாக, அதிமுக – பா.ஜ., கூட்டணியை உறுதி செய்வதுடன், தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யவும் இந்த சந்திப்பு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 14ம் தேதி சென்னை வரும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, 6 மணி நேரம் மட்டுமே இங்கு உள்ளார். அப்போது துக்ளக் விழாவில் பங்கேற்கும் அவர், பின்னர் தமிழக பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.

அ.தி.மு.க., ஒன்றுபட்டு இருப்பதையே பா.ஜ., தலைவர்கள் விரும்புகின்றனர். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை, தினகரன் ஏற்று கொண்டால், இரு கட்சிகளை இணைப்பதுடன், திமுக.,விற்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் பிப்.,06 பிறகு தான், தமிழக அரசியல் நிலவரத்தில் தெளிவான சூழ்நிலை தெரிய வரும் என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version