Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

Oredesam by Oredesam
October 9, 2020
in இந்தியா, செய்திகள்
0
ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
FacebookTwitterWhatsappTelegram

தன்னிறைவு கொண்ட சமுதாயத்தை உருவாக்க மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் முழுமூச்சுடன் செயல்படுத்தப்பட வேண்டும்  என்று காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக  துணைவேந்தர் டாக்டர் பி சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,  மகாத்மாவின் கனவை நனவாக்குதல் என்ற தலைப்பில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொடர்பு அலுவலகம், வேலூர் மற்றும் பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை இணைந்து நடத்திய இணைய கருத்தரங்கில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு, பதினாறாம் நூற்றாண்டு வரை தன்னிறைவடைந்த நாடாகவே இந்தியா இருந்தது என்று கூறிய அவர், சிலப்பதிகாரம் உள்ளிட்ட எந்த ஒரு நூலிலும் பட்டினி,  கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தொழிற்புரட்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு காலனிகளில் இருந்து கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்து அவர்களுக்கு தயாரித்த பொருட்களை விற்றார்கள். அது முதற்கொண்டு தன்னிறைவு சமுதாயமாக இருந்த இந்தியா ஆங்கிலேயர்களையும் மேற்கத்திய நாடுகளையும் சார்ந்திருக்கத் தொடங்கியது என்றும் அவர் மேலும் கூறினார்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

ஆங்கிலேயரின் இந்தப் போக்கு காந்தியை வெகுண்டெழச்செய்தது. அவர் இந்தியனாய் இரு, இந்திய பொருட்களையே வாங்கு என்ற சுதேசி இயக்கத்தை தொடங்கினார். இதன் காரணமாக ஏராளமான மக்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆடைகளைத் தீயிட்டுக் கொளுத்தவே, இங்கிலாந்தில் நெசவுத்தொழில் பெரும் பாதிப்படைந்ததாக அவர் தெரிவித்தார்

சிறு தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவற்றை மேம்படுத்த மத்திய அரசு ஆத்மனிர்பர் பாரத், ஸ்வச்ச் பாரத் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்று துணைவேந்தர் மேலும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய காந்திகிராம கிராமிய  பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர் டி. ரவிச்சந்திரன், மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை எடுத்துக்கூறினார். எவ்வளவுதான் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி போராடினாலும் அவர் பதவி ஆசையற்று  இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும்  காந்திய வழியைப் பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார். முசோலினியும், காந்தியும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலும்,  காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை முசோலினி ஏற்கவில்லை, இதேபோல் ஹிட்லரிடமும் அகிம்சையைக் கடைபிடிக்குமாறு மகாத்மா காந்தி கடிதங்களை எழுதியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அனைத்து வயதினரும் மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இணைய கருத்தரங்கில் உரையாற்றிய காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்  ஊரகத் தொழில் மேலாண்மைத் துறை இயக்குனர் டாக்டர் ஆர் சீரங்கராஜன், தன்னிறைவு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவது குறித்து கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். மாசற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படும் ஊரகத் தொழில் துறைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆண்டுக்கு குறைந்தது பத்தாயிரம் ரூபாய் அளவிலாவது கதர் ஆடைகளையும் உள்ளூர் மக்கள் தயாரித்த சோப்பு,, மருந்து, எண்ணெய் முதலியவற்றையும் அவர்களிடமிருந்து வாங்குமாறு அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக தொடக்க உரை நிகழ்த்திய சென்னை மண்டல பத்திரிக்கை தகவல் அலுவலக இயக்குனர் திரு குருபாபு பலராமன், மகாத்மா காந்தி எளிய வாழ்வு வாழ்ந்தார் என்றும் தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் மகாத்மா காந்தியின் அதிகாரப் பங்கீடு, அகிம்சை, பொறுப்புத் தன்மை முதலிய பண்புகள்,  எக்காலத்திற்கும் சமுதாயத்திற்குத் தேவை என்று வலியுறுத்தினார்.

வரவேற்புரை நிகழ்த்திய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் திரு ஜே காமராஜ், காந்திஜி துணிவுடனும், நெஞ்சுறுதியுடனும், செயல்பட்டார் என்றும், அவரது வாழ்க்கை வருங்கால சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, மறைந்த மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Here’s Every Accessory in Virgil Abloh’s Debut Louis Vuitton Collection

December 27, 2019
மாற்றி பேசிய அமைச்சர் நேரு சிக்கிய வீடியோ! விடியலின் அவலம் அம்பலமானது

அரசியலில் யாரும் புனிதர் அல்ல: நாங்கள் சங்கர மடமா நடத்துகிறோம்:மேடையில் உளறிய அமைச்சர் நேரு…

May 16, 2022
NAINAR

மணல் கடத்தலைத் தடுத்தால் மரணத்தைப் பரிசளிக்கும் திமுக அரசு-நயினார்நாகேந்திரன் ஆவேசம் !

August 21, 2025
Chhattisgarh

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது! உட்கட்சி பூசல் உச்சத்தில்! அச்சத்தில் தலைமை காங்கிரஸ்!

September 18, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x