லடாக் எல்லையில், சீனா தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சீனா ராணுவம் படைகள் முழுமையாக பின் வாங்கப்படுவது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, லடாக் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்து வருகிறது சீனா. இதனால், எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று மோடி கூறியதை அடுத்து இந்திய ராணுவம் தன்னை பலப்படுத்தி வருகிறது
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து ஐந்து ரஃபேல் விமானங்களை கொண்ட முதல் தொகுப்பு, வரும் 29 புதன் கிழமையன்று இந்தியா வந்து சேரும்.
இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு விமான தளத்திற்கு செல்லும் வழியில் ரஃபேல் ஜெட் விமானங்களில், பிரெஞ்சு விமானப்படை டேங்கர் விமானங்கள் மூலம் எரிபொருள் நிரப்பபடும் என்று இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
சீனாவுடனான எல்லை பதற்றத்தின் நடுவே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஃபேல் ஜெட் விமானங்களின் புதன்கிழமைக்குள் ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில், முறைப்படி விமானப்படையில் இணைக்கப்படும்.
இந்த ஜெட் விமாங்களில், 60 கி.மீ வரை சென்று தாக்கவல்ல புதிய தலைமுறை வான் பரப்பிலிருந்து நிலப்பரப்பை தாக்க வல்ல ஏவுகணைகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
ரஃபேல் விமானம் பலவிதமான சக்திவாய்ந்த ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதில் ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளரான MBDA நிறுவனத்தின் கண்ணுக்கு புலப்படாத தூரம் வரை சென்று தாக்க வல்ல ஏவுகணை, அனைத்து வகை வானிலையில் இயங்கக்கூடிய தொலை தூரம் வரை சென்று எந்த இலக்கையும் தாக்கக் கூடிய MICA ஏவுகணை ஆகியவை அடங்கும்.
போர் விமானத்தை கொண்டு வர தேவையான உள்கட்டமைப்புகளை தயார் செய்தல் மற்றும் விமானிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை இந்திய விமானப்படை ஏற்கனவே முடித்துவிட்டது.
இதனால் அண்டை நாடுகளில் இந்தியாமீது கொஞ்சம் பயத்தை அதிகரித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















