இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் பட்டியலில் இருந்து மாப்ளா கலவரத்தை சேர்ந்த 387 பேர் நீக்கம்!
காரணம்?
இந்திய வரலாற்று ஆராய்ச்சி அமைப்பு வெளியிடும் அந்த பட்டியலை ஆராய்ச்சி செய்த மூவர் குழு, “1921இல் நடந்த இந்த கலவரம் இந்திய சுதந்திர போராட்டத்துக்காக செய்யப்பட்டதில்லை.
அது உண்மையில் மத அடிப்படைவாத, மதமாற்ற கலவரம். அவர்கள் எழுப்பிய கோஷங்களும் சுதந்திரத்துக்கான கோஷங்களில்லை.
அந்த கலவரம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் (இஸ்லாம்) மதகுரு ஆட்சியை நிறுவவே ஏற்பட்டது. அது வெற்றி பெற்றிருந்தால், இந்தியாவின் பகுதி (கேரளா) இந்தியாவை விட்டுப் போயிருக்கும்.” என்று கூறியிருக்கிறது.
‘விடுதலை போராட்ட தியாகி’யாக இது நாள் வரை கொண்டாடிய வரியம் குன்னத் குன்ஹாமத் ஹாஜி ஒரு கலவர்க்காரன் என்றும், அவன் ஒரு ஷரியா நீதிமன்றம் அமைத்து அதன் மூலம் பல ஹிந்துக்களின் தலையை வெட்டினான் என்றும் அந்த அறிக்கை கூறியிருக்கிறது.
மாப்ள போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தியாவின் சுதந்திரம் பற்றி பேசாமால், எங்கேயோ இருக்கும் துருக்கியின் கலீஃபாவை முதல் உலகப்போரின் போது நீக்கிய பிரிட்டிஷ் அரசை எதிர்த்து, “அங்கே மீண்டும் இஸ்லாமிய மதத்தலைவர் ஆட்சியை கொண்டு வா” என போராட்டத்தை 1921இல் துவங்க, அது கேரளாவில் இஸ்லாமியர்களை உசுப்பேற்றி விட்டது.
கேரள ‘மாப்பிள்ளை’ ‘கலீஃபா’ போராட்டத்தில் பங்கெடுக்க இந்துக்களை வற்புறுத்த, அவர்கள் எதிர்க்க, முடிவில் எதிர்த்த ஆயிரம் ஆயிரம் இந்துக்களை கொன்று குவித்தனர், மாப்பிள்ளை போராட்டக்கார்கள்
.அந்த படுகொலையை வரலாற்றில் இருந்து மறைக்க, “பிரிட்டிஷை எதிர்த்து போராடியதே ஒழிய இந்துக்கள் படுகொலை அல்ல” என்று திரித்தனர்
மலபாரின் மாப்ளா இஸ்லாமியர்களால் இந்துக்களுக்கு எதிரான இரத்த வெறி கொண்ட அட்டூழியங்கள் விவரிக்க இயலாதவை.தென்னிந்தியா முழுவதும் இருந்த வெவ்வேறு கருத்துடைய இந்துக்களிடம் அச்ச உணர்வு ஒரு அலையாக படர்ந்தது-பாபாசாகேப் Dr. B.R.அம்பேத்கர்(22/8/1921) என கூறியிருந்தார்.
அப்போது பிரிட்டிஷாருக்கு எதிராக போராடியவர்கள் என கூறிய மாப்ள கலவரக்காரர்கள் சுதந்திர போராட்ட வீரர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொண்டு வரலாற்று புத்தகத்தில் இடம் பெற்றது.
இப்போது மோடி அரசால் அந்த பிழை திருத்தபட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் பட்டியலில் இருந்து மாப்ளா கலவரத்தை சேர்ந்த 387 பேர் நீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளது மத்திய அரசு