நாடு முழுவதும் இரண்டாவது கொரோனா அலை அதி வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக இந்தியாவில் மிக மிக வேகமாக பரவிவருகிறது. இந்த கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்ஸிஜன் அதிகளவு தேவைப்படுகிறது. இதனையடுத்து மத்தியஅரசு தனக்கு சொந்தமான ரயில்வே துறை மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.
இந்திய ரயில்வே இதுவரை சுமார் 13,319 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை பல மாநிலங்களுக்கு
814-க்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் விநியோகித்துள்ளது.இதுவரை 208 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்களது பயணத்தை முடித்து பல மாநிலங்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எனவே தமிழகத்துக்கு கூடுதலாக 180 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை எழுந்தது.
இதனை தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த 5 நாட்களுக்குள் தமிழகத்துக்கு மகாராஷ்டிராவிலிருந்து கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க உத்தரவிட்டுள்ளதாக என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தி உள்ளார்.