இந்தியாவின் தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமல்ல… அந்த தடுப்பு மருந்து விநியோகத்தை நிர்வகிக்கும் முறைக்கும் (கோ-வின் CoWIN தளம்) உலக நாடுகள் பல ஆர்வம் காட்டிய காரணத்தால், அந்த CoWIN தளத்தை விருப்பமுள்ள நாடுகளுக்கு இலவசமாக கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது!
தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் பல சாதனைகள் படைத்தது வருகிறது. குறிப்பிட்டு சொன்னால் கொரோன தடுப்பூசி ஆகும். பல நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இலவசமாக வழங்கியது. மேலும் கொரோன கவச உடைகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது பின்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியது. இதன் அடுத்த மைல் கல்லாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவின் இணையதளம் உலகம் முழுவதும் பயன்படுத்த காத்திருக்கிறது. அதற்கு மோடி அரசும் ஒப்புதல் கொடுத்துவிட்டது.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த, பொது சுகாதாரத்திற்கான இரண்டாவது மாநாட்டில், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் உயர்மட்ட குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா பேசியதாவது:’கோ – வின்’ செயலி உருவாக்கப்பட்ட ஐந்து மாதங்களிலேயே, 30 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் தடுப்பூசிக்காக அதில் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர். குடிமக்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, மாவட்ட அளவில் துல்லியமான, உண்மையான தகவல்களை பெற முடியும்.
இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு, தேதியில் மாற்றம் மற்றும் முன்பதிவை ரத்து செய்யும் நடைமுறையை மிக எளிதாக மேற்கொள்ளலாம் என தொடர்ந்து கூறி வருகிறோம். முன்பதிவு செய்யாமலேயே தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் முடியும். 80 சதவீத மக்கள் அப்படி தான் போட்டுக் கொள்கின்றனர். அவர்களை பற்றிய விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த கோ – வின் செயலியை போன்ற தொழில்நுட்பத்தை தங்கள் நாட்டிலும் நடைமுறைபடுத்த, கனடா, மெக்சிகோ, பனாமா, பெரு, உக்ரைன், நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வமாக உள்ளன.அவர்களுக்கு இந்த மென்பொருளை இலவசமாக அளித்திட, மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















