மத்திய அரசின் விவசாயிகள் தொடர்பான வேளான் சட்டத்தில் சிற்சில சர்ச்சைகள் இருக்கலாம் ஆனால் அது கருணாநிதியின் “உழவர் சந்தையினை” விட எக்காலமும் மிக சிறந்த சட்டம் என்பதில் மாற்று கருத்தே இல்லை
உழவனை வயலில் வேலை செய்யாமல் ஒழுங்காக வியாபாரம் பார் என வைத்த சட்டம் அது, விவசாயி வியாபாரம் செய்வானா இல்லை வயலில் நிற்பானா?
அவனின் அனைத்து உற்பத்தியினையும் அவனால் உழவர் சந்தையில் விற்க முடியுமா? மதுரைக்கு அருகே 30 கிமி தள்ளி உள்ள கிராம விவசாயி தன் தோட்டத்து மூட்டை கணக்கான கத்தரிக்காயினை எல்லாம் தன் சிறிய கிராமத்தில் விற்க முடியுமா? இல்லை மதுரைக்கு ஓடிவர முடியுமா?
கருணாநிதியின் திட்டங்களெல்லாம் வெறும் கனவு, சினிமா வசனத்துக்கு மட்டும் பொருந்த கூடிய கனவு என்பது பிச்சைக்காரர் ஒழிப்பு திட்டத்தில் தெரிந்தது, சமத்துவ புரத்தில் தெரிந்தது, அப்படியே உழவர் சந்தையிலும் தெரிந்தது
உழவர் சந்தையினை கூட பொறுத்து கொள்ளலாம், ஆனால் அதை சுற்றி கருணாநிதி எழுதி வைத்த வசனங்கள்தான் மகா கொடுமையானவை
சுவர் வசனம் உழவனின் கண்ணீரை துடைக்கும் என நம்பியிருந்த ஒரே ஒரு கட்சி அகில உலகிலே திமுக மட்டும்தான்