பாரத பிரதமராக மோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய பாஜக அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக தற்பொழுது இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையான தடையற்ற வணிக உடன்பாடு ஞாயிறுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்மூலம் துணிகள், வேளாண் விளைபொருள், உலர் பழங்கள், நவமணிகள், நகைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அந்நாட்டில் சுங்க வரி விலக்கு அளிக்கப்படும்.
இந்த உடன்பாடு நடைமுறைக்கு வந்ததன் அடையாளமாக மூன்று ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வணிகத்துறைச் செயலாளர் சுப்பிரமணியம் சான்றிதழ்களை வழங்கினார். இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியான ஐக்கிய அரபு அமீரகம் நடுக்கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க, மத்திய ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக விளங்குகிறது.
இந்த உடன்பாடு இருநாடுகளிடையே ஆறாயிரம் கோடி டாலர் மதிப்புக்கு இப்போதுள்ள வணிகத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் பத்தாயிரம் கோடி டாலர் மதிப்புக்கு உயர்த்த உதவும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















