கொரோனா’ வைரஸ் தொற்றால், உலகமே பீதியடைந்து வருகிறது, வல்லரசு நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகின்றார்கள். இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு வருகிறர்.என உலக நாடுகள் பாராட்டுகின்றன.
கொரோன அச்சத்தால் சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகளை ஒருங்கிணைத்து, கொரோனாவுக்கு எதிராக போராடும் முயற்சியில், இந்தியா ஈடுபட்டுள்ளது.
ஊரடங்கு: சீனாவில் உருவான கொரோனா வைரஸ்,தற்போது உலகில் உள்ள நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கொடுங்கோலன் ஆட்சி புரிந்து வருகிறது. இந்த கொரோனாவால் தினமும் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுகின்றார்கள். தினமும் 500க்கும் மேற்பட்டோர் இறக்கிறார்கள். இந்தியாவிலும், இந்த நோய் பரவியுள்ளது. இதுவரை, 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 17 பேர் இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி முதல் இந்தியாவில், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், கொரோனாவால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது என்ற தெரிந்தவுடன், அதன் பரவலை தடுக்க, மத்திய மாநில அரசுகள் மிக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. கொரோனாவில் இருந்து இந்தியர்களை காப்பற்றும் முதல் நிகழ்வாக,கொரோனாவின் சொந்த ஊரான சீனா வூஹான் நகரிலிருந்து, இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இதன் பின் கொரோனாவின் தாக்கம் சீனாவை உலுக்கியது இதனை தொடர்ந்து சீனாவுக்கு, 15 டன் மருத்துவ பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.இந்த பொருட்களில் அத்தியாவசமான முக கவசங்கள், கையுறைகள் போன்ற உபகரணங்கள் இந்தியா உடனடியாக அனுப்பி வைத்தது. அங் முக கவசங்கள் இல்லாமல் தள்ளாடியது சீனா அந்த சமயத்தில்.சீனாவிற்கு நேசக்கரம் நீட்டிய, இந்தியாவின் செயல், சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.
தற்போது கொரோனாவின் கொடூர முகம் தீவிரமடைந்துள்ளது. ஐரோப்பா நாடுகளை ஒரு கை பார்த்து வருகிறது. இந்த நிலையில், இந்த கொரோன கொடுங்கோலனை கட்டுப்படுத்துவதற்க்கு சார்க் நாடுகளின் ஒத்துழைப்பை, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். சார்க் நாடுகளின் தலைவர்களை, ‘காணொளி ‘ வழியாக தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி, சமீபத்தில் பேசினார். அப்போது, கொரோனா வைரஸின் பரவலை தடுக்க, அணைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும் பிரதமர் மோடியின் இந்த முயற்சி, சார்க் நாடுகளிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த உதவியுள்ளது.
கொரோனாவால், தெற்காசியாவின் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில், 3.71 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, இந்த இழப்பை ஏற்றுக் கொள்ளும் நிலையில், தெற்காசிய நாடுகள் எதுவும் இல்லை. எனவே, தெற்காசிய நாடுகளின் பிரதிதியாக செயல்பட, சார்க் அமைப்பால் மட்டும் தான் முடியும். உலக மக்கள் தொகையில், ஐந்தில் ஒரு பங்கு, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் உள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள, சார்க் நாடுகளிடம் சிறந்த மருத்துவ வசதிகள் தேவை. இதை உணர்ந்து தான், சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து, பிரிட்டன் விலகிவிட்டது. ‘டிரான்ஸ் பசிபிக்’ ஒத்துழைப்பை ரத்து செய்ய, அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இவை, சர்வதேச அளவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், சார்க் அமைப்பை இந்தியா வலுப்படுத்தினால், சர்வதேச அளவில், கொரோனாவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு, புதிய வழியைக் காட்ட முடியும். அண்டை நாடுகளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் முயற்சி, இப்போது, உலகுக்கே எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















