அயோத்தி ராமர் கோவில் மக்களிடையே மிகபெரும் எழுச்சியையும் பக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.இதற்கு முழுக்க காரணம் பா.ஜ.க அரசே என மக்கள் கூற ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா முழுவதும் ராமர் கோவில் கட்ட காரணம் பாஜக தான் மோடி தான் என ராமர் பக்தர்கள் பிரதமர் மோடியை மற்றொரு கடவுளாக நினைத்து கொண்டாடி வருகின்றார்கள்.
ராமர் பக்தர்களின் 500 ஆண்டுகால கனவு என்றே சொல்லலாம் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த வரலாற்று நிகழ்வில் காங்கிரஸ் போன்ற பல எதிர்க்கட்சிகள் பங்கு பெறாது என அறிவித்துள்ளதும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளது.
இந்த நிலையில் தான் தமிழகத்திலும்ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் முடிவு எடுத்துள்ளனர்.
அயோத்தியை போலவே தமிழகத்திலும் புதிய ராமர் கோவிலைக் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தமிழகத்தில், சென்னைக்கு அருகே இதற்கான நிலம் வாங்க ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
ராமர் கோவிலை நிர்வகிக்கும், அயோத்தி ராமர் கோவில் டிரஸ்ட், தென் மாநிலங்களில் கால் பதிக்க விரும்புகிறதாம். இந்த டிரஸ்ட் தான் தமிழகத்தில், 10 ஏக்கர் நிலம் வாங்கி ராமர் கோவிலை கட்டப் போகிறதாம்.
இதற்கு அரசியல் என்ற நிலைப்பாட்டை தாண்டி கடந்த கால கசப்பான அனுபவங்களுக்கு பதிலடி தருவதற்காகவும் ராமர் பக்கதர்களின் கோரிக்கை ஏற்று இந்த கோவில் அமைக்கப்பட உள்ளது. மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினி தமிழகத்தில் திக வினர் ராம பிரானை இழிவுபடுத்தியதாக கோரி பெரும் பரபரப்பை கிளப்பினார்.
1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சி திமுகவின் ஆதரவோடு மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.
அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை ஆடைகளற்ற நிலையில், செருப்பு மாலை அணிவித்தும், சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். இந்த சம்பவத்தை அந்த காலகட்டத்தில் இருந்த எந்த ஒரு பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. ஆனால் அப்போதே சோ நடத்திய ‘துக்ளக்’ பத்திரிக்கையில் அட்டைப்படமாக போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார் என்று ரஜினி பேசியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி பெரியாரை இழிவு படுத்தியதாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தரப்பு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் பத்திரிகையின் புகைப்படங்களை வெளியிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.
இதன் மூலம் ரஜினிகாந்த் கூறியது உண்மைதான் என்று மக்களுக்கும் தெரியவந்துள்ளது. இது இந்து மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால் உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கும், எதற்கெடுத்தாலும் விவாதம் என்று தொடங்கும் ஊடகங்கள், ஆண்டுகள் கடந்து தற்போது நடக்கும் 2020ஆம் ஆண்டில் கூட இந்த விஷயத்தை பற்றி பேசவும் விவாதிக்கவும் எந்த ஊடகமும் முன்வரவில்லை என்பதுதான். இதெற்கெல்லம் பதில் சொல்லும் விதமாக சென்னையில் மிகபிரமாண்டமாக ராமர் கோவில் அமைக்கும் பணியினை மேற்கொள்ள உள்ளது. அயோத்தி ராமர் கோவில் டிரஸ்ட்.