பாகிஸ்தானுக்கு குட்டு மோடி அரசின் ராஜதந்திர வெற்றி..

இந்தியா ஓசைபடாமல் ஒரு காரியத்தை சாதித்திருக்கின்றது இங்கல்ல வெளிநாட்டு விஷயம் இது

ஆம், துருக்கி தலைமையில் ஒருவித புரட்சி நடக்கும் நேரமிது. துருக்கி இஸ்லாமியர்களின் தலைமை நாடு எனும் பெரும் கனவினை நோக்கி நடக்கின்றது.

அதன் வழியில் இன்னும் சில நாடுகளும் செல்கின்றன அதில் முக்கியமானது பாகிஸ்தான், அவர்களுக்குள் சில புரிந்துணர்வுகள் உண்டு, அப்படி துருக்கி ஹக்கியா சோபியா கிறிஸ்தவ ஆலயத்தை மியூசியமாக்கி இப்பொழுது மியூசியத்தை மசூதியாக்கிற்று.

பாகிஸ்தான் இதையே வேறுவிதமாக செய்தது, இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அது சீக்கிய குருத்துவாரா ஒன்றை மசூதியாக்கிற்று.

சீக்கியர்கள் உலகமெல்லாம் பரவி இருந்தாலும் இந்தியாவில் அவர்கள் அதிகம், அவர்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள், இந்திராகாந்திக்கு சீக்கியர் மூலம் தொல்லைகொடுத்த பாகிஸ்தான் மோடிக்கும் அதே விஷயத்தை கையில் எடுத்தது.

சீக்கிய சிக்கலை தொடக்கினால் இந்தியா திகைக்கும் என்பது பெரும் அரசியல் கணக்கு

பாகிஸ்தான் குருத்வாராவினை தொட்டபின் தனி சீக்கியநாடு கோஷம் உலகெல்லாம் சீக்கியரிடம் எதிரொலித்தது, இது வாக்கெடுப்பு நடத்தபடவேண்டும் எனும் அளவுக்கு சென்றது

கனடா போன்ற நாடுகளில் சீக்கியர் அதிகம், அவர்களை அடுத்து ஈழதமிழரும் அதிகம். சீக்கியர் தொடங்கினால் தமிழர் தொடங்குவர் பின் இங்கே திராவிட கோஷ்டியும் நாம் தமிழரும் கிளம்பும்

ஆனால் கன்டா போன்ற நாடுகள் இம்மாதிரி வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை என சொல்லிவிட்டன. இன்னும் சில நாடுகளும் இந்த பேச்சே எடுக்க கூடாது என சொல்லியாயிற்று

இதே கனடா 1980களில் காலிஸ்தானை ஆதரித்ததும், சீக்கிய போராளிகள் இந்திய விமானத்தை தகர்த்தபின்னும் அமைதிகாத்ததெல்லாம் வரலாறு

அந்த கனடா இப்பொழுது மாறியிருக்கின்றது, இன்னும் பல நாடுகள் இந்தியாவின் நிலையினை புரிந்திருக்கின்றன‌

ஆம் இன்று இந்தியாவினை துண்டாட நினைக்கும் கோஷ்டி நாளை கனடாவிலும் கைவரிசை காட்டும் என்பது ஒன்றும் புரியாத விஷயமல்ல‌

ஆக பாகிஸ்தானின் கணக்கினை இந்தியா சர்வதேச அரங்கில் நொறுக்கிபோட்டுவிட்டது, இந்தியாவுக்கு சிக்கலை உருவாக்க நினைத்த பாகிஸ்தான் சிக்கிவிட்டது

மோடி அரசின் ராஜதந்திர வெற்றி இது..

சும்மாவே பஞ்சாபிய சிங்கங்களுக்கு பாகிஸ்தானை பிடிக்காது, இப்பொழுது குருத்வாராவினை மசூதியாக்கி சீண்டிவிட்டார்கள்.

இனி எங்காவது பாகிஸ்தான் சிக்கினால் அவ்வளவுதான், அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது, கடித்தே விழுங்கிவிடுவார்கள் சீக்கிய கூட்டம்..

கட்டுரை :- ஸ்டான்லி ராஜன் வலதுசாரி சிந்தனையாளர்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version