நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
மாணவர்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கவழக்கங்களை உறுதி செய்வதற்காக ‘சைபர் பாதுகாப்பு கையேட்டை’ சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு, ஆன்லைன் சிக்கல்கள், மிரட்டல்கள், அவதூறு, மனரீதியான கொடுமை, ஆன்லைன் பாலியல் கொடுமை, மோசடிகள் உள்ளிட்ட தலைப்புகளை கொண்ட கையேடு http://cbseacademic.nic.in/web_material/Manuals/Cyber_Safety_Manual.pdf எனும் தளத்தில் கிடைக்கும்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரகால எதிர்வினை குழு (செர்ட்-இன்), காணொலி செயலிகளின் பாதுகாப்பு கவலைகளை கையாள்வதற்கான கையேட்டை தயாரித்துள்ளது. https://www.cert-in.org.in/s2cMainServlet?pageid=PUBWEL01 எனும் இணைப்பில் அதை காணலாம்.
மாணவர்களுக்கான தொழில்/பணி வழிகாட்டுதலுக்காக ஆசிரியர்களின் திறனை வளர்க்கும் இரண்டு நாள் நிகழ்ச்சியை சிபிஎஸ்இ ஏற்பாடு செய்கிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் உள்ள மூத்த மாணவர்களுக்கு வழிகாட்டுவார்கள். கேந்திரிய வித்யாலயாக்களில் மனநல ஆலோசகர்கள் மூலமும், ஜவகர் நவோதயா பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் துணை முதல்வர்கள் மூலம் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கான பல்வேறு சேவைகளை தேசிய கல்வி உதவித்தொகை தளம் வழங்குகிறது. https://scholarships.gov.in என்பது அதன் இணையதள முகவரி ஆகும்.
கடந்த ஐந்து வருடங்களில், ஐந்து திறன் பல்கலைக்கழங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை: ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம், குருகிராம், ஹரியானா; சிம்பயாசிஸ் ஸ்கில்ஸ் அண்டு புரொஃபெஷனல் பல்கலைக்கழகம், புனே, மகாராஷ்டிரா; பாரதிய திறன் வளர்த்தல் பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்; ராஜஸ்தான், ஐஎல்டி திறன் பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான், மற்றும் தில்லி திறன் மற்றும் தொழில்முனைதல் பல்கலைக்கழகம், புது தில்லி ஆகும்.
திறன் சார்ந்த படிப்புகளை வழங்குவதற்காக பல்கலைக்கழக மானிய குழுவால் 2016-17-ம் ஆண்டு 425 கல்வி நிறுவனங்களுக்கும், 2017-18-ம் ஆண்டு 424 கல்வி நிறுவனங்களுக்கும், 2018-19-ம் ஆண்டு 624 கல்வி நிறுவனங்களுக்கும், 2019-20-ம் ஆண்டு 354 கல்வி நிறுவனங்களுக்கும், 2020-21-ம் ஆண்டு 1208 கல்வி நிறுவனங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எட்டாவது பட்டியலின் கீழ் மொழிகளுக்கு ஊக்கமளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்காக சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி மத்திய நிறுவனம் செயல்படுகிறது.
இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், மாநில அரசுகள் உள்ளிட்டவையோடு இணைந்து மொழிகளின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறது.
இதற்கிடையே, தேசிய கல்வி கொள்கை, 2000-ன் முதல் ஆண்டு நிறைவை ஒட்டி, பல்வேறு இணைய கருத்தரங்குகளை இந்திய அரசு நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பல்முனை மற்றும் முழுமையான கல்வி குறித்த தேசிய இணைய கருத்தரங்கை பல்கலைக்கழக மானிய குழு இன்று நடத்தியது. கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டனர்.
இணைய கருத்தரங்கில் தொடக்கவுரை ஆற்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்கார், தக்ஷசீலம் மற்றும் நாளந்தா காலத்தில் இருந்தே நமது நாட்டில் முழுமையான மற்றும் பல்முனை கற்றலுக்கான நீண்ட பாரம்பரியம் இருப்பதாக கூறினார்.
இணைய கருத்தரங்கில் உரையாற்றிய உயர்கல்வி செயலாளர் திரு அமித் காரே, தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் உருவாக்கம் மற்றும் அடிப்படைகள் குறித்து பேசினார். தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் தேசிய கல்வி கொள்கை கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.