இன்று சர்வதேச யோகா தினம்.இதை உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன வழக்கமா ஒரு நாட்டின் குடியரசு மற்றும் சுதந்திர தின விழாக்களை மட்டுமே அ ந்த நாட்டு மக்கள் கொண்டாடுவது மரபு. ஆனால் உலகாளவிய அளவில் ஒரு நாட்டின் பாரம்பரியத்தை அனைத்து நாடுகளும் கொண்டாடுவது யோகா தான் என்று நினைக்க தோன்றுகிறது.
இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகாவை சர்வதேச நாடுகளில் கொண் டு சென்று அதனை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ம் தேதி அன்று உலக நாடுகள் அனைத்தும் வருடாந்திர விழாவாக கொண்டாட வைத்தும் அதற்காக அ ந்நாட்டு மக்களை வாரக்கணக்கில் பயிற்சி பெற வைத்து அவர்களுக்கு நல்வாழ்வை அளித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்..
கொரோனா காலத்தில் யோகா பயிற்சி நல்ல பலனை கொடுத்தது மூச்சு திணறல் அதிகரித்து வெண்டிலேட்டரில் இருந்த நபர்களுக்கு அவர்கள் அருகில் இருந்து அவர்களின் மூச்சை கவனித்து எப்படி மூச்சை சரிசெய்வதற்கு யோகா நித்ரா என்ற எளிமையான தியானம் மனபதற்றத்தை குறைத்து, உடலில் தளர்வை ஏற்படுத்தும். ரத்த அழுத்தத்தை சீர்படுத்தும். இது பாதிக்கப்பட்டவர் சகஜ நிலைக்கு திரும்ப உதவும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் இது போல் யோகா பயிற்சி நம் உடலையும் மனதையும் பேணி காக்கின்றது.