நமது பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவரையும் வீழ்த்த, உலக நிதித்துறையின் பெரும்புள்ளியான ஜார்ஜ் சோரஸ் என்பவர், ரூ 7000 கோடி ஒதுக்கியதோடு மட்டுமன்றி, இந்த நன்கொடை மூலம் எதிர்கட்சிகள், தேசவிரோதிகள் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்தி கலகம், கலவரங்களை ஏற்படுத்தி, நாட்டை சீரழிக்க சதித்திட்டம் தீட்டியுள்ள திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. ஹங்கேரி- அமெரிக்க கோடீஸ்வரரும், உலக நிதியத்தின் பெரும்புள்ளியுமானவர் ஜார்ஜ் சோரஸ். இவர் கடந்த ஜனவரி 23-ம் தேதி, ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பேசியிருக்கிறார்.
அப்போது உலகின் முக்கிய தலைவர்களான, டொனால்ட் ட்ரம்ப், நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகிய நால்வரும் தேசியவாதிகள் என்றும், ஜனநாயகத்துக்கு ஆபத்தான இவர்கள் உண்மையான சர்வாதிகாரிகள். இந்த அணி தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
எனவே இந்த தேசியவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு 1 பில்லியன் டாலர் அதாவது ரூ 7000 கோடி செலவழிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
ஜனநாயகம், மனித உரிமை, தாராளமயம் என்ற போர்வையில் நிதியும், ஊக்கமும் அளித்து அதன்மூலம் உலகமயமாக்கல் திட்டத்தை பரப்பி, பெரும் பணம் சம்பாதிப்பவரான இந்த சோரஸ், உலகை பயமுறுத்தும் செய்தி இந்தியாவில் இருந்து வருகிறது. அது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி” ஒரு இந்து தேசியவாத அரசை உருவாக்குகிறார்” என குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, தேசியத்தை முன்னெடுக்கும் விதமாக, ஒரு இந்து தேசியவாத அரசை உருவாக்கியதோடு மட்டுமின்றி, அரை தன்னாட்சி முஸ்லீம் பிராந்தியமான காஷ்மீர் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளால், லட்சக்கணக்கான முஸ்லிம்களின் குடியுரிமைக்கு இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை மனதில் வைத்து கூறியிருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு மோசடி பேர்வழி என்றும், மீண்டும் தேர்தலை எதிர்கொள்ளப்போகும் அவரை வீழ்த்த வேண்டும், “வரவிருக்கின்ற அமெரிக்க தேர்தல் புரட்சிக்கான சமயம்” என்றும், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் வெளிநாட்டு நிதியுதவி நிறுவனங்கள், 2020 மற்றும் அடுத்த சில ஆண்டுகளில், ஜின்பிங் மற்றும் ட்ரம்பின் தலைவிதியை மட்டுமல்ல உலகின் தலைவிதியையும் மாற்றும் என்றும் கூறியுள்ளார்.
சீன அதிபர் ஜின்பிங் தன்னைச்சுற்றி அதிகாரத்தைக் குவிப்பதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரம்பரியத்தை முறித்துக்கொண்டதோடு மட்டுமின்றி, தான் வலிமை பெற்றவுடனே ஒரு “ சர்வாதிகாரியாக” மாறியிருக்கிறார் என்றார்.
சோரசின் பேச்சில் புடின், ஜின்பிங் பெயர்களை சேர்த்திருந்தாலும் கூட இவர் அறிவித்த நன்கொடையான 7 ஆயிரம் கோடி, ஏறக்குறைய சர்வாதிகார நாடுகளான ரஷ்யா, சீனாவில் செல்லுபடியாகாது என்பதால் அந்த நாடுகளை அதிகம் பாதிக்க வாய்ப்பில்லை.
ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரும் ஜனநாயக நாடுகள். மேலும் இந்தியாவில் தேசியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடியும், உலகமயமாக்கல் முக்கியமல்ல: அமெரிக்கா தான் பிரதானம் என தேசியம் பேசும் ட்ரம்பும், உலகமயமாக்கலின் வேகத்தை குறைத்து வருகிறார்கள். மேலும் புடின், ஜின்பிங் கூட ஆழ்ந்த தேசியவாதிகள் தான்.
ஆனால் இந்த சோரஸ் ஏன் இவர்களுக்கு எதிராக களமிறங்கியிருக்கிறார் என்று ஆராய்ந்தால், நிதித்துறையில் சூதாட்டம் நடத்தும் சோரஸ் போன்றவர்கள், கடந்த 25 ஆண்டுகளில் உலகமயமாக்கல் மூலம் பெரும் பணத்தை, பல பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளனர்.
அதாவது 1992-ல் உலகமயமாக்கல் அறிவிக்கப்பட்ட அடுத்த ஆண்டில், ஒரு மணி நேரத்தில் ஒரு பில்லியன் டாலர், இந்திய ரூபாயில் 7 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளனர்.
இவ்வாறு கொள்ளை லாபத்தை அள்ளித்தரும் உலகமயமாக்கலுக்கு முட்டுக்கட்டை போடும் என்பதால் தேசியத்தையே அழிக்க நினைக்கும் சோரஸ், மோடி, ட்ரம்ப், புடின் போன்ற தேசியவாதிகளை குறிவைத்து தன்னுடைய அறிவிப்பை “ தேசியவாதத்திற்கு எதிரான நீண்ட திட்டம்” என்று கூறியிருக்கிறார்.
இவரைப்பொறுத்தவரையில் கொழித்த செல்வத்தை கொண்டு வாளாவிருக்காமல், பல நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அரசியல் செய்வதோடு மட்டுமின்றி, அதற்காக 1979-2017 வரையில் இதுவரை 2.30 லட்சம் கோடி செலவிட்டிருக்கிறார் என்றால் இவரிடம் கொழிக்கும் செல்வத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
மதமாற்றம் செய்யும் தீவிரவாத சக்திகளை ஊக்குவிப்பது, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசத்தை வீழ்த்த கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நிதியளிப்பது, ட்ரம்புக்கு எதிராக திரும்ப கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நிதியளிப்பது என பணம் கொட்டும் உலகமயமாக்கலுக்காக இவர்செயல்படுகிறார்.
இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ அமைப்புகள் நன்கொடை பெற்று வந்ததை பிரதமர் தடுத்தது, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என அதிபர் புடின் தடை செய்தது, சீனாவும் இவரை ஒதுக்கியது என பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இந்த நான்கு தேசியவாதிகளையும் குறிவைத்து பெரும் தொகையை நன்கொடையாக வாரி வழங்குகிறார் சோரஸ்.
எனவே இந்தியாவின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் அச்சுறுத்தும் வகையில், மோடி எதிர்ப்பாளர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளித்தெளிக்கும் இவரை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
இல்லையெனில் தனது பணத்தின் மூலம் நம் நாட்டு விஷயத்தில் மூக்கை நுழைக்கும் சோரஸுக்கு இவர்கள் துணைநிற்கிறார்கள் என்று கருதவே வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த உண்மையை நாம் மக்களிடம் கொண்டு செல்லும் அதே வேளையில், ஆழிப்பேரலை, காட்டாற்று வெள்ளம், கொடும் சூறாவளி போன்ற எத்தனையோ சவால்களையெல்லாம் சமாளித்துக் கடக்கும் நம் பாரத பிரதமர் மோடிக்கு, இந்த சோரஸ் போன்ற தீய சக்திகளை எதிர்கொள்வது என்பது துச்சமே!