பிரதமர் நரேந்திர மோடி விரைவில் கொல்லப்படுவார் என சீக்கியர் ஒருவர் பேசுவதாக வெளியான வீடியோவை தொடர்ந்து ’டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் காலிஸ்தானிகள்’ புகுந்து விட்டார்களா? என்ற பதற்றம் நிலவ தொடங்கியுள்ளது.
டெல்லி சலோ என்ற பெயரில் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சென்ற முறை டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது செங்கோட்டையின் முன் கலவரம் செய்து தேசிய கொடியை கீழே இறக்கி போராட்டக்காரர்களின் கொடியை செங்கோட்டையில் ஏற்றிய சம்பவம் நடைபெற்றது. இதனால் போராட்டக்காரர்கள் டெல்லி எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், கடும் தடுப்புகளும், கண்காணிப்புகளும் போடப்பட்டுள்ளன.
மேலும் போராட்டக்காரார்கள் பிரதமர் மோடியை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முந்தைய விவசாயிகள் போராட்டத்தின்போது, மத்திய அரசு வழங்கிய வாக்குறுதியை நம்பியே விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டத்து
வேளாண் சட்டங்கள் திரும்பப்பெற்றபோதிலும் மீண்டும் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். கடந்தமுறை,இதில் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. என்கிறார்கள். மேலும் குறிப்பிட்ட மாநிலங்கள் மட்டுமே இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
வரம்பு கடந்து போராட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். . அவற்றில் ஒன்றாக சீக்கியர் ஒருவர், ‘பிரதமர் மோடி அடுத்த சில ஆண்டுகளில் கொல்லப்படுவார்’ என எச்சரிக்கிறார்.இந்த வீடியோவின் நம்பகத்தை உறுதி செய்யும் பின்னணி குறித்தான முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
எனினும் இந்த வீடியோவினை தீவீர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் சீக்கியர்களுக்கு என தனிநாடு கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அதிகம் கலந்திருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றது.