நேற்று இந்தியா உலகினை மிரள வைக்கும் திட்டம் ஒன்றை முறையாக அறிவித்துள்ளது, இது வெளியே சாதரண திட்டமாக தெரிந்தாலும் கொடுக்கபோகும் விளைவுகள் மிக முக்கியமானவைஇந்தியா தன் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விண்வெளிதுறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கின்றது, இத்திட்டம் Indian Space Association (ISpA) என அழைப்பபடும்இதில் தனியார்கள் அரச அனுமதியுடன் விண்வெளி ஓடங்கள், செயற்கை கோள்கள் இன்னும் பல விஷயங்களை செய்யலாம், பறக்கவிடலாம்.
இது பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு பலனளிக்கும், இந்தியா விண்வெளி பலத்தில் முதல் 5 இடங்களுக்குள் வரும் நாடு என்பதால் ஏராளமான நாடுகளும் கம்பெனிகளும் இனி இந்தியாவில் இத்தொழிலில் ஆர்வம் காட்டும், வேலை வாய்ப்பும் தொழில்நுட்பமும் பெருகும்அமெரிக்க ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவணங்கள் இந்தியாவிலும் வளரும், எதிர்காலத்தில் வெளிநாடுகளின் எந்த வளர்ச்சிக்கும் குறையா வளர்ச்சி இந்தியாவில் வரும்மகா முக்கியமான விஷயம் ராக்கெட் நுணுக்கங்களில் புது புது ஆய்வுகள் வர வர அவை ஏவுகனை போர் விமானம் இன்னும் வான்வெளி பலத்துக்கு பயன்படும்.
அமெரிக்காவின் லாக்ஹீன் மார்ட்டின் போன்ற நிறுவணங்கள் இங்கே உருவாகும். 6ம் தலைமுறை விமானம் ராக்கெட் ஏவுகனை ஏவுகனை தடுப்ப்பு இவை இனி இந்தியாவிலே செய்ய வாய்ப்புகள் பிரகாசமாக உண்டுஇதில் ஒரு சில கேள்விகள் எழலாம், இந்த தொழில்நுட்பம் இதர நாடுகளுக்கு கடத்தபடாதா என்பதுஅமெரிக்காவின் லாக்ஹீன் மார்ட்டின் நிறுவண நுட்பமோ இல்லை ஸ்பேஸ் எக்ஸ் நுட்பமோ சீனாவாலும் ரஷ்யாவாலும் திருட முடியுமா?
முடியாதுகாரணம் மொத்த முழு பாதுகாப்பும் தொழில்நுட்பமும் அரச கண்காணிப்பில் இருக்கும், யாரும் எதையும் கடத்த முடியாதுமோடி அறிவித்திருக்கும் ISpA திட்டம் உலக அரங்கில் வான்வெளியில் இந்திய பலத்தை உயர்த்தி அந்த ஆய்வுகள் இந்திய ராணுவத்துக்கும் தேச பாதுகாப்புக்கும் வளங்களை வழங்கி இன்னும் பொருளாதாரத்துக்கும் பெரும் வாய்ப்பினை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லைமிக சரியான திட்டத்தை செய்திருக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள்தேசம் புதிய உலகில் கால் வைக்கின்றது, மிக பெரிய வான்வெளி விஞ்ஞான புரட்சிக்கு இந்தியாவினை அழைத்து செல்கின்றது.
மோடி அரசுஆனால் உபியும் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கோஷ்டிகளும் மோடி விண்வெளியினை விற்றுவிட்டார் என கூப்பாடு போடத்தான் செய்வார்கள், காரணம் தேசத்தையும் தேச நலன்களையும் விற்பது ஒன்றே அவர்களுக்கு தெரிந்தது என்பதால் அதையேதான் சொல்வார்கள்.ஆனால் நாளையே இத்தாலி கம்பெனி இந்தியாவில் வந்து ராக்கெட் செய்யட்டும் சத்தம் வராது, கியூப அரச கம்பெனி வரட்டும் சத்தமே வராதுசன் குழுமத்தின் கலாநிதி மாறன் கனரக தொழிலில் இறங்கி ராக்கெட்டுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கட்டும் கொஞ்சமும் சத்தம் வராதுஅட அவ்வளவு ஏன்?
விரைவில் இந்தியாவில் விண்வெளி சுற்றுலா திட்டம் இங்கே தொழில் செய்யும் பன்னாட்டு கம்பெனியால் அறிவிக்கபட்டால், அந்த அறிவிப்பினை நல்ல விலைக்கு விளம்பரபடுத்துவது யாரென்றால் கலைஞர் டிவியும் சன் டிவியுமாகத்தான் இருக்கும்இன்னும் அந்த திட்டத்தில் உபியும் திராவிட கும்பலும் விண்வெளி சுற்றுலாவெல்லாம் செல்வார்கள், ஏன் என கேட்டால் “கடவுளை வானத்தில் தேட போகின்றேன், ஏனென்றால் நான் பகுத்தறிவாளன்” என சிரிக்காமல் சொல்வார்கள்.
கட்டுரை எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.