உலகமே எதிர்பார்த்து வந்த ஒரு புவியி யல் மாற்றத்தை தாய்லாந்து தூக்கி எறிந்து சீனாவுக்கு அதிர்ச்சியையும் இந்தி யாவுக்கு நிம்மதியையும் அளித்து இருக்கிறது.இதன் மூலமாக இந்தியாவுக்கு இந்தியப்பெருங்கடலில் இருந்த ஆளுமை உறுதியாகி இருக்கிறது. அதை விட உலகின் தாய்லேண்டான இந்தியாவுக்கு தாய்லாந்தும் தலை வணங்கி இருக்கிறது என்றே கூறலாம்.
சூயஸ் கால்வாய் பனாமா கால்வாய் இங்கிலீஸ் கால்வாய் மாதிரி எதிர்கால உலக வரலாற்றில் மனிதன் இயற்கையை உடைத்து உருவாக்கிய மாபெரும் புவியியல் மாற்றம் என்று புகழ் பெற இருந்த கிரா கால்வாய் திட்டத்தை சீனாவின் கடும் நிர்பந்தம் மற்றும் பொருளாதார உதவி அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு இந்தியாவின் விருப்பத்தின் பேரில் தாய்லாந்து தூக்கி எறிந்து விட்ட து
.
காலம் காலமாக சீனாவின் வியாபாரம் மேற்காசிய மற்றும் ஐரோப்பிய நாட்க ளுக்கு தென் சீனக்கடலில் இருந்து இ ந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் நடைபெற்று வருகிறது.அதாவது தென் சீனக்கடலில் இருந்து புறப்படும் சீன கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியாக தான் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைய முடியும்.மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சீனாவுக்கு செக் வைக்க இரண்டு முக்கியமான துறைமுகங்களை இந்தியா தன்னுடைய கடற்படை தளங்களாக பயன் படுத்திக்கொள்ள அனுமதி பெற்று இருக்கிறது ஒன்று சிங்கப்பூரின் சாங்கி துறைமுகம்இன்னொன்று இந்தோனேசியாவின் சபாங் துறைமுகம். இந்த இரண்டு துறைமுகங்களும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சீனாவுக்கு இந்தியா மீது கடுமையான கோபம் உண்டாகி இருந்தது.ஏனென்றால் சீனவின் 80 சதவீத கடல் வழி வியாபாரம் மலாக்கா நீரிணை வழியாகவே நடைபெற்று வருகிறது.இந்த மலாக்கா நீரிணைக்கு மிக அருகில்உள்ள இரண்டு துறைமுகங்கள் சிங்கப்பூ ரின் சாங்கி துறைமுகம் அடுத்து இந்தோனேசியாவின் சபாங் துறைமுகம். அதாவ து சீனக்கப்பல்கள் சாங்கி வழியாகத்தா ன் மலாக்கா நீரிணைக்குள் நுழைய முடியும். இன்றைக்கு சிங்கப்பூர் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்க முக்கிய காரணமே சாங்கி துறைமுகம் தான்.
சாங்கி துறைமுகம் தான் மலாக்கா நீரி ணையின் மையப்புள்ளியாக இருக்கிறது அது இப்பொழுது இந்தியாவின் கைகளி ல் இருக்கிறது.அதோடு மலாக்கா நீரி ணை வழியாக இந்தியாவில் நுழையும் கப்பல்கள் கண்டிப்பாக அந்தமான் கடலில் உள்ள இந்தோனேசியாவின் சபாங் துறைமுகத்தின் வழியாகவே வர முடியும் ஆக சீனக்கப்பல்கள் இந்தியாவுக்கு நுழைய உள்ள இரண்டு முக்கிய வழிகளான சிங்கப்பூரின் சாங்கி துறைமுகமும் இந்தோனேசியாவின் சபாங் துறைமுக மும் இப்பொழுது மோடியின் உழைப்பி னால் இந்தியாவின் கைகளில் இருக்கிறது. இதனால் தான் சீனா தாய்லாந்துவளை குடாப்பகுதியான இஸ்த்மஸ் ஆஃப் கிரா என்கிற தாய்லாந்து நாட்டின் தென் கோடி பகுதியில் உள்ள நிலப் பகுதியை வெட்டி விட்டு அங்கு ஒரு கால்வாயை உருவாக்கி அதன் மூலமாக தென் சீனக்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்க விரும்பியது.
தாய்லாந்துக்கு குறுக்காக 102 கிலோ மீட்டர் நீளம் 400 மீட்டர் அகலம் 25 மீட்டர் ஆழத்தில் ஒரு கால்வாயை உருவாக்கி இந்தியப் பெருங்கடலையும் தென்சீன கடலையும் இணைக்க சீனா விரும்பியது இதன் மூலமாக சீனாவில் இருந்து இந்திய கடல் பகுதியான அந்தமான் கடல் பகுதியில் சீனாவின் கப்பல்கள் நுழைய 1100 கிலோ மீட்டர் தொலைவு குறை கிறது. அதோடு சீனக்கப்பல்கள் இந்தியாவை அடைய மூன்று நாட்கள் காலமும் குறைந்து விடும். இதனால் சீனாவின் வர்த்த கம் அதிகரிக்கும். அதோடு இந்தியாவுக்கு ஆபத்தும் அதிகரிக்கும். அதாவது அந்தமானில் உள்ள இந்திய ராணுவ டிவி சனக்கு இந்த கிரா கால்வாய் திட்டம் மிக ப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். சீனாவுக்கு கேட் போடத்தான் இந்தியா சாங்கி மற்றும் சபாங் துறைமுகங்களைஇந்திய கடற்படை தளங்களாக பயன்படு த்த அனுமதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் கிரா கால்வாய் திட்டம் வந்துவிட்டால் நேரடியாக இந்தியாவுக்குள் சீன கப்பல்கள் நுழைந்து விடும்.
இதற்காகத் தான் சீனா சுமார் 21 லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை உருவாக்க துடித்து நின்றது. ஆனால் அந்தோ பரிதாபமாக இந்தியாவின் வேண்டு கோளின் படி கிரா கால்வாய் திட்ட
த்தை ரத்து ணெய்யப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்து என்றும் நாங்கள் எங்களின் தாய் லேண்டான இந்தியா வின் பக்கமே என்று நிரூபித்து இருக்கி றது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா தாய்லாந்து வழியாக ஒரு மிகப்பெரிய சாலையை உருவாக்கி வருகிறோம் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் பொருளாதார மேம்பாடு அடைய வட கிழக்கு மாநிலங்களை கிழக்கு ஆசிய நாடுகளோடு இணைக்கும் வண்ணம் 1360
கிலோ மீட்டர் நீளத்திற்கு மணிப்பூர் மா நிலத்தில் உள்ள மோரே கிராமத்தில் இருந்து தாய்லாந்தின் மாசாட் நகரம் வ ரை மியான்மர் வழியாக ஒரு சூப்பர் நெடுஞ்சாலையை உருவாக்கி வருகிறோம்.
தாய்லாந்து சாலை முடிந்த பிறகு அது கம்போடியா லாவோஸ் வியட்னாம் வரை சுமார் 3200 கிலோ மீட்டர் தொலைவு வ ரை இந்த நெடுஞ்சாலையை விரிவு படுத்த வேண்டும் என்பது மோடியின் ஆசை.ஈஸ்ட் வெஸ்ட் எக்னாமிக் காரிடார் East-West Economic Corridor (EWEC) என்று சொல்லப்படும் இந்த சாலை மோடி யின் கனவுத்திட்டங்களுள் ஒன்று.
எப்படி CPEC அதாவது சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் பாகிஸ்தானையும் சீனாவையும் தரை மார்க்கமாக இணை த்து நமக்கு குடைச்சல் கொடுக்கிற தோ அதே அடிப்படையில் EWEC ஈஸ்ட் வெஸ்ட் எக்னாமிக் காரிடார் மூலமாக சீனாவுக்கு குடைச்சல் கொடுக்க மோடி உருவாக்கிவரும் திட்டம் தான் EWEC ப்ராஜெக்ட்.சீனாவின் கிரா கால்வாய் திட்டத்தைதாய்லாந்து மூலமாக முறியடித்த மோடி
வட கிழக்கு மாநிலங்களை தாய்லாந்துடன் இணைக்கும் கலாதன் திட்டத்தை தாய்லாந்து வரை கொண்டு செல்ல இருக்கிறார்.EWEC மாதிரியே (Kaladan Multi-Modal Transit Transport Project) என்று கூறப்படும் கலாதன் மல்டி மாடல் டிரா ன்ஸிட் டிரான்ஸ்போர்ட் திட்டமும் வட கீழ்க்கு மாநிலங்களை வளமாக்க மோடி செயல் படுத்தி வரும் ஒரு மிகப்பெரிய திட்டமாகும்.
இந்த கலாதன் ப்ராஜெக்ட் எப்படி என்றா ல் இது ஒருநீர்வழி சாலையோடு இணை ந்த தரைவழி சாலையை அமைப்பதாகும் இந்த திட்டத்தின் படி கொல்கத்தாவில் இருந்து மியான்மரின் சிட்வி துறைமுகத் தை அதாவது 539 கிலோமீட்டர் தொலை வை கடல் வழியாக இணைக்கிறார்கள் .
அதன் பிறகு சிட்வியில் இருந்து மியா ன்மரின் பலேட்வா நகரத்துக்கு இடையே உள்ள 158 கிலோ மீட்டர் தூரத்தை மியா ன்மரின் கலாதன் ஆற்றின் வழியே நீர் வழி சாலையை உருவாக்குகிறார்கள்
அதன் மூலம் இணைத்து பிறகு பலேட்வா டூ கலிவா வரை 67 கிலோமீட்டர் தொ லைவை நெடுஞ்சாலை மூலமாக இ ணைத்து பிறகு கலிவா டூ மோரே இடை யே உள்ள 62 கிலோமீட்டர் தொலைவை இணைத்து விட்டால் இந்தியா வந்து விடும்.
இந்த மோரே கிராமம் தான் மியான்ம ரையும் இந்தியாவையும் இணைக்கும் பார்டர்.இந்த மோரே கிராமத்தில் தான் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். ஒரு கால த்தில் திரை கடலோடியும் திரவியம் தேடு என்று தமிழ் பொன் மொழிப்படி பர்மா வில் அதாவது இன்றைய மியான்மரில் நுழைந்த தமிழர்கள் ஒட்டுமொத்த பர்மாவின் வியாபாரத்தையும் தங்களின் கைகளுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
இதனால் கடுப்பான பர்மியர்கள் 1962 ல்நடைபெற்ற ராணுவ புரட்சியில் தமிழர்களை அடித்து துரத்தி விட்டார்கள். வசதி இருந்த தமிழர்கள் சென்னைக்கு வந்து பர்மா பஜாரை உருவாக்கி தாய் மண்ணி ல் செட்டிலாகி விட்டார்கள். வசதி இல்லா தவர்கள் இந்தியா மியான்மர் எல்லை யான மோரேவில் செட்டிலாகி விட்டார்கள்.சுமார் 60 வருடங்களாக தாங்கள் பிறந்து வளர்ந்த பர்மிய மண்ணை காண முடி யாது ஏக்கத்துடனே இருந்தார்கள். இவர்கள் இப்பொழுது இந்த கலாதன் திட்டத்தினால் உருவான மோரே டூ கலிவா ரோடு மூலமாக மியான்மர்க்குள் நுழைந்து தாங்கள் வாழ்ந்த மண்ணில் மீண்டும் தொழில் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
பாருங்கள் மோடி எப்படி தமிழர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுக் கொண்டு இருக்கிறா ர் என்று பாருங்கள். இந்த கலாதன் ப்ராஜெக்ட் மூலமாக கொல்கத்தாவில் இ ருந்து சரக்கு பொருட்கள் தாய்லாந்து க்குள் செல்ல சுமார் 1500 கிலோ மீட்டர் தொலைவும் மூன்று நாள் யணமும் மிச்சமாகி விடும் பாருங்கள். இதே தொலைவு மிச்சப்படும் சீனாவின் கிரா கால்வாய் திட்டத்தை இந்தியாவுக்கு எதிரானது என்று தாய்லாந்து ஒதுக்கி விட்டு இந்தியாவின் கலாதன் திட்டத்தில் தாய்லாந்து ஏன் நுழைந்தது என்று கேட்கிறீர்களா..ஏனென்றால்ஏனெனில் தாய்லாந்தின் தாய்லேண்ட் நம்முடைய இந்தியா தான்.
ராமர் அவதரித்த பாரத பூமியின் கலா ச்சாரம் தழுவி சுழன்று கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகளில்தாய்லாந்தும் ஓன்றுஇன்று உலகிலேயே சுற்றுலாவாசி களின்சொர்க்க பூமி தாய்லாந்து தான்.
தாய்லாந்து பள்ளிகளில் ராம கீர்த்தி எ ன்ற பெயரில் மாணவர்களுக்கு ராமா ய ணம்்பாடமாக கற்பிக்கப்படுகின்றது. தா ய்லாந்து நாட்டு குத்துச் சண்டை விளை யாட்ட்டில் அனுமன், வாலி, சுக்ரீவன் பெய ர்களை கொண்டே சண்டை முறைகளை உருவாக்கி உள்ளார்கள் தாய்லாந்தின் பழைய மன்னர்கள் ஆண்ட வம்சத்திற்கு பெயர்என்ன தெரியுமா.அ யூத்தியா வம்சம் எப்படி நாம் ராமன் இரு க்கும் இடம் அயோத்தி என்று சொல்கி றோமோ அதேமாதிரி இந்த ராமர் பெயர் தாங்கி வந்த அரசர்களும் அங்குள்ள அயூ த்தி என்கிற நகரத்தையே ஆரம்பத்தில் தலை நகரமாக கொண்டு ஆண்டு வந்து ள்ளார்கள்..
.
இதை விட இன்னொரு முக்கியமான வி சயம் என்னவென்றால் இறுதியாக இந்த
நாட்டு மன்னர்கள் குடும்பத்தில் யாரேனு ம் இறந்தால் இந்தியாவிலிருந்து 7 நதி களின் புனித நீரைக் கொண்டு சென்று அவர்களின் ஈம சடங்குகளை செய்கிறா ர்கள் என்றால் தாய்லாந்து நாட்டின் தா ய்லேண்ட் நம்முடைய இந்தியா தானே இப்பொழுது சொல்லுங்கள்..இந்தியா வுக்கு பாதகமான கிரா கால்வாய் திட்ட த்தை தாய்லாந்து நிராகரித்தன் மூலமாக தாய் லேண்டான இந்தியாவுக்கு மோடியி ன் முயற்சியால் தாய்லாந்தும் தலை வ ணங்கி இருக்கிறது என்பது உண்மைதானே…
நன்றி :விஜயகுமார் அருணகிரி வலது சாரி சிந்தனையாளர்