நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1- ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்ற கூட்ட தொடரானது நடைபெற்று வரும் நிலையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- மத்திய பாஜக அரசு பெரிய குறிக்கோளுடன் மிகக் கடுமையாக உழைக்கின்றது. பாஜக ஆட்சியில் கிராமப்புற மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 4.8 கோடி வீடுகள் கட்டி முடிக்க காங்கிரசுக்கு 100 ஆண்டுகள் பிடித்திருக்கும். 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பேசுவது எங்களின் சாதனையை அல்ல.. நாட்டின் சாதனையை தான் பேசுகிறோம்.
வந்தே பாரத், மேக் இன் இந்தியா, புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஆகியவை இந்த நாட்டின் சாதனை.. இந்தியா மட்டுமின்றி உலக நலனிற்காகவும் இந்தியா பாடுபடுகிறது. இதை ஜி20 மாநாடு உலகம் உலக தலைவர்கள் புரிந்து கொண்டனர். மத்திய பாஜக அரசு மிகப் பெரிய குறிக்கோள்களுடன் உழைத்து வருகிறது. எனவே, நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்
மேலும் பேசிய பிரதமர் மோடி பகவான் ராமர் வீட்டிற்கு மட்டுமல்ல, இவ்வளவு பெரிய பிரமாண்ட கோவிலுக்கும் திரும்பியுள்ளார். இந்த முறை 400 இடங்களுக்கு அதிகமாக பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும். மல்லிகார்ஜூன கார்கே கூட இதை கூறியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்பதில்லை. பா.ஜனதா தனியாக 370 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். என அடித்து கூறினார்.