உலகமே உற்று நோக்கும் தேர்தலாக இந்தியாவின் பாரளுமன்ற தேர்தல் அமைந்துள்ளது. மூன்றாவது முறையாக மோடி மீண்டும் அரியணையில் ஏற வேண்டும் என உலக இந்தியர்கள் மட்டுமின்றி பல உலகத்தலைவர்களுக்கும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட
நாடுகள் மற்றும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மோடி மீண்டும் பிரதமராக வர கூடாது என சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு இந்தியாவில் உள்ள சில அமைப்புகள் உதவிவருகிறது. எது நடந்தாலும் மோடி தான் மீண்டும் பிரதமராவர் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.
பிரதமர் மோடியை வெல்வதற்காக இண்டி கூட்டணி என்ற தலைப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி,ஒவ்வொரு கட்டமாக சுக்கு நூறாக உடைந்து வருகின்றது.கூட்டணி பேச்சை ஆரம்பித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாஜக எதிராக இருந்த கட்சிகள் தற்பொழுது பாஜக கூட்டணியில் இணைந்தும் எதிர்க்கட்சியில் உள்ள தற்போதைய, முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாரதிய ஜனதா கட்சியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.தற்போது தனி பெரும்பான்மை அசுர பலத்துடன் ஆட்சி நடத்தும் பாஜக மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை விட அது இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வது உறுதி என பலதரப்பட்ட மக்களால் பேசப்பட்டு வருகிறது.
இதனை பறைசாற்றும் விதமாக பல்வேறு தரப்பட்ட ஊடகங்கள் மற்றும் கருத்துக்கணிப்பு நடத்துவோர் மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 எம்பிக்களை பெரும் எனவும் அதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 380 இடங்களை பெற வாய்ப்புள்ளதாக தெரிகின்றது எதிலும் பாஜக இதுவரை அதிகளவில் வாக்கு பெறாத மாநிலமான தமிழகத்தில் 19 சதவீத ஓட்டுகளை பெருமையாகவும் இரண்டு முதல் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரும் எனவும் தெரிகின்றது.
அதேபோல் மேற்குவங்க மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக 20 முதல் 24 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறும் இடவும் ஆளுங்க செய்ய விட அதிக சதவீதம் ஓட்டுகளை பெருமையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக சீட்டுகளை பெரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் 30 முதல் 50 இடங்கள் வரை மட்டுமே வெற்றி பெறும் இடவும் காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி ஊட்டும் வகையில் தற்போது வெளியேந்து உள்ள பல்வேறு தரப்பட்ட கருத்துக்கணிப்புகளிலும் தெரிந்துள்ளது.
இண்டி கூட்டணிக்கு உள்ள ஒரே ஆறுதல் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருப்பது மட்டுமே இங்கு மட்டுமே அதிக சீட்டுகள் வெற்றிபெறும் என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிந்துள்ளது இருப்பினும் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க கூடும் என்பதால் வரும் தேர்தல் காலங்களில் தமிழகத்தில் இருந்தும் காங்கிரஸ் துரத்தி அடிக்கப்படும் என்பது பாஜகவினிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நாடளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் பல முக்கிய முடிவுகளை எடுக்க பாஜக அரசு ஏற்கனவே பிளான் செய்துவிட்டுத்தான் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது. 3 வது முறையாக பதவியேற்றவுடன் பொது சிவில் சட்டம் தேசத்திற்கு எதிராக பேசும் நபர்களுக்கு தனி சட்டம் இயற்றப்பட்டு சிறையிலிருந்து வரமுடியாத அளவில் சட்டம். தேசிய கல்வி கொள்கையை தீவிரமாக அமல்படுத்துதல். மேலும் வேளாண் சட்டம் என பல அதிரடி முடிவுகளை எடுக்கும் பாஜக அரசு. என டெல்லி வட்டரங்கள் தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஊழல் வழக்குகளை விரைந்து முடித்து பலஊழல் செய்த அரசியல் கட்சி தலைவர்களை சிறைக்கு செல்வார்களாம். மோடியின் சுனாமியால் தேர்தல் முடிந்த பிறகு பல கட்சிகளே இருக்காது போல…