ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு முடிவு செய்தது. ரஷ்யா, உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய தயாரானது தான்.
உக்ரைன் தலைநகர் கீவை மற்றும் கார்கீவ் நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் எதிர் தாக்குதல் நடத்தப்படுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டனா். இதனால் உலக நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகாித்து வருகிறது. ஏவுகணை, பீரங்கி போன்ற ஆயுதங்களின் சத்தம் இருநாட்டு நகரங்களிலும் எதிரொலிக்கின்றன.
அதே சமயம் ரஷ்யா மீது ஆழமான தாக்குதலை நடத்துவதற்கு ஜெலன்ஸ்கி, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அனுமதி கேட்டார். ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. அதாவது அனுமதி கொடுக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும். முன்னதாக ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் திட்டமிடும் நாடுகள் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சாித்து இருந்தார். இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பேரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்கின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. பிரதமர் மோடி, கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவுக்கும்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். போர் விஷயத்தில் இரு நாடுகளும் இறங்கி வந்தால் நன்றாக இருக்கும். ரஷ்யா – உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக செயல்பட இந்தியா தயாராக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதின், இந்தியா தான் மத்தியில் இருந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி இருந்தார். இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், போரை நிறுத்த இந்தியா போன்ற அமைதியை விரும்பும் நாடுகளால் தான் முடியும் என கூறி இருந்தார்.இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்தித்தார்.
இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் ஒப்பந்த முறையில் கைமாற்றி கொள்ளப்பட்டனா். ரஷ்யா வீரர்கள் 203 பேரை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்து வைத்து இருந்தது. இதேபோல் உக்ரைன் வீரர்களையும் ரஷ்யா சிறைப்பிடித்து இருந்தது. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே தற்போது ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 103 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் ரஷ்ய வீரர்கள் 203 பேரையும் உக்ரைன் விடுவித்து உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபரை சந்தித்து சில நாட்களில் நடந்தது என்பதால் உலக நாடுகள் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















