28 சீக்கிய பக்தர்களை குருத்வாரில் குண்டு வைத்து கொன்ற கேரளாவை சேர்ந்த தீவிரவாதி மொகம்மது!

கடந்த புதன் கிழமை மார்ச் 25ம் தேதி ஆப்கானிஸ்தான் உள்ள ஷோர் பஜார் பகுதியில் அமைந்துள்ள குருத்வாரா மீது கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் 25 சீக்கிய பக்தர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் இந்தியாவை மிகவும் அதிர்ச்சியடைய செய்தது.

இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ் . இதை தீவிரமாக விசாரித்ததில் தீவிரவாதிகளின் ஆதரவு நாடான பாகிஸ்தானில் இயங்கும் தெஹ்ரீக்- அமைப்புக்கும் தொடர்பு உள்ளது. என தெரிய வந்தது மேலும் இந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ,எஸ் தீவிரவாதிகள் 3 பேர் ஆப்கான் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.’ இந்த கொடூர தாக்குதலை தலைமையேற்று நடத்தியவன் கேரளாவை சேர்ந்தவன் என்ற மற்றொரு தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது .

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவன் கேரளாவைச் சேர்ந்த தீவிரவாதியின் பெயர் மோசின் என்றும் இவன் திரிகரிபூர் என்ற ஊரைச் சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது இவனின் வயது 29, பள்ளிப்படிப்பை பாதியில் உதறிவிட்டுசோமுக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதன் பின் இவனின் குடும்பத்தினர் கன்னூருக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

மோசின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவன் காணவில்லை. பின் விசாரித்த போது ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளான் .இது குறித்து இவரது குடும்பத்தினரும் காவல்துறைக்கு எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை. மேலும் மோசினுக்கும் குடும்பத்துக்கும் 2 ஆண்டுகளாக எந்த ஒரு தொடர்பும் இல்லை.

2 ஆண்டுகளுக்கு முன் யு.ஏ.இ. செல்கிறேன் என்ற பெயரில் அவர் வீட்டை விட்டு ஓடிப்போயுள்ளான் அங்கிருந்து அவர் எப்படி ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் சேர்ந்தான் என்பது . குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது . இன்னமும் கூட தீவிரவாதி மோசின் மீது காவல்நிலையத்தில் புகார் பதியவில்லை

‘காஷ்மீரில் முஸ்லிம்களின் அவல நிலைக்கு’ பழிவாங்குவதாக கூறி இந்த சீக்கியர்கள் மீது இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இந்த தாக்குதலை பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவின் பேரில் தலிபானின் குவெட்டா ஷுரா உத்தரவிட்டதாக ஆப்கான் மற்றும் மேற்கத்திய பாதுகாப்பு அமைப்புகள் நம்புகின்றன. தலிபானின் துணைத் தளபதி சிராஜுதீன் ஹக்கானி தலைமையிலான ஹக்கானி நெட்வொர்க் மற்றும் லஷ்கர்-இ-தோய்பாவின் உதவியுடன் அவர்கள் பாணியில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கை ஓன்று கூறுகிறது.

Exit mobile version