கேரளாவில் தொடரும் பாலியில் வன்கொடுமை ! சாலையில் நின்ற 21 வயது பெண்ணை நாள் முழுவதும் நாசப்படுத்திய முகமது ஷமீர் அவரின் கூட்டாளிகள்

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் மக்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதா இல்லை தினம் ஒரு குற்றம் என கேரளாவை நாசமாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போராடுவதா என்பது தெரியாமல் தவித்து வருகிறார்கள். லவ் ஜிகாத் முதல் தங்கம் கடத்தல் வரை கம்யூனிஸ்டுகளின் தரம் கெட்ட ஆட்சி நடந்து வருகிறது. தற்போது மக்களுக்கும் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை கேரளாவில் இருந்து வருகிறது.

ஜூன் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி தலைவர் 6 வயது சிறுமியை 3 ஆண்டுகளாக கற்பழித்து கொலை செய்துள்ளான் அந்த காம கொடூரன் . இந்த நிலையில் 21 வயது பெண்ணை 3 பேர் நாசமாக்கிய சம்பவம் கேரளா கோழிக்கோடு பகுதியில் அரங்கேறி உள்ளது. ஒரு நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார் 21 வயது பெண். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத்து. கேரளாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது .

கோழிக்கோட்டில் செவாயூரில் 21 வயதான பெண், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இவர் வீட்டில் பெற்றோருடன் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம். சம்பவம் நடந்த அன்றும் பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு இருசக்கரவாகனத்தை எடுத்து கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.அவரின் வாகனம் பழுதானதால் ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த கோபிஷ் மற்றும் முகமது ஷமீர் மற்றும் குன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திரேஷ் ஆகிய 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த பெண்ணிடம் நைசாக பேசி பைக்கை சரி செய்து செய்கிறோம் என கூறி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பழைய பேருந்தில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு நாள் முழுவதும் வைத்து அப்பெண்ணை சீரழித்துள்ளனர். அந்த பெண்ணை மறுநாளன்று ஒரு தனிமையான இடத்தில் அழைத்து வந்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அந்த பெண், தனது வீட்டுக்கு சென்றதும் பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகள் சொன்ன 3 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உடனடியாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version