மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மத்திய பிரதேச ஆட்சி கவிழ்ப்பு இன்னு ம் சில தினங்களில் அரங்கேற இருக்கிறது என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த 8 எம்எல்ஏக்கள இப்பொ ழுது பிஜேபிக்கு ஆதரவாக ஹரியானாவில் குர்கானில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களில் 4 பேர் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் 2 பேர் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் ஒருவர்
சமாஜ்வாடி எம்எல்ஏ இன்னொருவர் சுயேச்சை எம்எல்ஏ என்று தகவல்கள் தெரிவித்து
உள்ளது.
ஆனாலும் பிஜேபிக்கு 14 எம்எல்ஏ க்களின் ஆதரவு இருப்பதாகவும் எனவே பிஜேபி ஆட்சி அமைய ஒட்டுமொத்தமாக 121 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மத்திய பிரதேச சட்டசபையில் மொத்தம் உ ள்ள 230 எம்எல்ஏ க்களில் 2 இடங்கள் காலி
யாக இருக்கிறது.
இதில் இதுவரை 121 எம்எ ல்ஏக்களின் ஆதரவுடன் இருந்த காங்கிரஸ் ஆட்சிக்கு இப்பொழுது 8 எம்எல்ஏக்கள்
களின் ஆதரவு இல்லாவிட்டால் 113 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருக்கும்.
இதே நேரத்தில் பிஜேபிக்கு 115 எம்எல்ஏக்க ளின் ஆதரவு கிடைத்து விடுவதால் காங்கிரஸ்
ஆட்சி கவிழவே வாய்ப்புகள் இருக்கிறது.
இப்பொழுது சட்டமன்றத்தில் பிஜேபிக்கு 107 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு 1 எம்எல்ஏ சுயேச்சை 4 என்று காங்கிரஸ் எம்எ ல்ஏக்களின் ஆதரவு இல்லாமலே பிஜேபிக்கு
114 எம்எல்ஏ க்களின் ஆதரவு கிடைத்து
விடும்.
ஆனால் சுயேச்சை கள் திடீரென்று காங்கிரஸ் பக்கம் பல்டி அடிக்க வாய்ப்புகள் இருப்ப தால் காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் பிஜேபிக்கு இழுத்தால் தான் பிஜேபி ஆட்சி அமைக்க
முடியும்.
காங்கிரஸ் கட்சியின் அதிருப்திஎம்எல்ஏ க்
கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி விரோத நடவடிக்கை காரணமாக எம்எல்ஏ பதவி பறிக்
கப்பட்டால் அவர்களால் வாக்களிக்க முடியாது
போய்விடும்.அதோடு சட்டமன்ற எம்எல்ஏக்களின் எண்ணிக்கை யும் குறைந்து விடும்.
எனவே நம்பிக்கு வாக்கெடுப்பில் பிஜேபி அரசு வெற்றி பெறுவது சுலபமாகி விடும் ஆக சிவராஜ் சிங்சௌகான் மீண்டும் முதல்வராக பதவியேற்கநேரம் நெருங்கி கொண்டு வருகிறது.
கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் அருணகிரி விஜயகுமார்.