ராமர் ஆலயத்திற்கு ஆதரவு தெரிவித்த…!
ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம் முகமது தவ்ஹிடி..!
அயோத்தி ராமர் ஆலய பூமி பூஜைக்கு எதிராக சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள்.
சில தீவிரவாத அமைப்புக்கள், பாகிஸ்தான், மற்றும் அசாவுதீன் ஓவைசி போன்ற சில கட்சி தலைவர்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்.
மேற்கூறிய நபர்களின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் ராமர் ஆலயம் அமைய காரணமாக இருந்த 4 இஸ்லாமிய பெருமக்களுக்கு மோடி அரசு அழைப்பு விடுத்திருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இஸ்லாமிய மக்களிடையே, நன்மதிப்பு பெற்றவரும், உலகம் முழுவதும் அமைதி, திகழ வேண்டும் என்று உழைக்கும் நபர் இமாம் தவ்ஹிடி. அமைதியான முஸ்லிம்கள் மோடியை நேசிக்கிறார்கள். பயங்கரவாதிகள் நேசிப்பது இல்லை என்று அண்மையில் குறிப்பிட்டு இருந்தார்.
ராமர் ஆலயத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பகவான் ராமர் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது