பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி மறைத்துள்ளனர். இதுதான் திராவிட மாடல் அரசு.ஒரு முதலமைச்சருக்கு இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. அதிகாரிகள் அதனை மறைக்கிறார்கள். அதிகாரிகள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்தது அவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால், வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்று முதலில் கூறிய கமல், பிறகு எம்பி சீட் கிடைத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்று மாற்றி பேசுகிறார். கமல்ஹாசன் ராஜ்யசபா பதவிக்காக அவரின் நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டார்.
தமிழ்நாட்டில் மின் கட்டணம் அறிவிக்கப்படாமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு அதை பரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசுடைய எந்த திட்டங்களையும் மாநில அரசு நிறைவேற்றுவதில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் வீடு வீடாக பெட்டிகள் செல்லும் என்று விஜய் கூறியது உண்மைதான். திமுக தலைமைக்கு நெருக்கமான ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டி வருவதாக தகவல் வெளியாகிறது. மேலும் சினிமா நடிகைகளுக்கு அவர்கள் லட்சக்கணக்கில் பரிசு பொருள் வாங்கி கொடுப்பதாக கூறுகிறார்கள்.
போலி இந்தித் திணிப்பு நாடகத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவீர்கள் என்ற கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன், “ஆயுதப் படை தேர்வில் தொடங்கி மருத்துவப் படிப்பு வரை தமிழில் கொண்டு வந்து தமிழை போற்றுகிறார் பிரதமர் மோடி. மத்திய அரசை திமுக தனது அரசியல் தேவைகளுக்காக பழிசுமத்துகிறது” என்றும் குற்றம்சாட்டினார்.
திருக்குறளை உலகம் எங்கும் எடுத்துச் செல்லும் மத்திய அரசு, கீழடி ஆய்வை மறுக்கிறது என்பது பொய்யான தகவல் என்றும் தெரிவித்த அவர், “காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் 7.5 மடங்கு அதிகமாக ரூ.6626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவை மத்திய அரசின் ஆளுகைக்குள் வராத சுயாதீனமான அமைப்புகள் என்பது திமுகவுக்கு தெரியாத என்ற அவர், திமுகவின் ஊழல்கள் குறித்து நியாயமான பதிவான புகார்களின் அடிப்படையில் விசாரித்தால் அவற்றை பழிவாங்கும் நடவடிக்கை என்பதா என்றும் கேட்டுள்ளார். திமுகவின் தீர்மானங்கள் உண்மையை எதிர்கொள்ள முடியாததன் வெளிப்பாடே ஆகும் என்றும், ஆட்சியின் தவறுகளை தீர்மானங்கள் மூலம் மறைக்க முயற்சி செய்தாலும் 2026ஆம் ஆண்டு மக்கள் தீர்ப்பு ஆணித்தரமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மதுரையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் கண்டனம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “நிதி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக உண்மையில்லாத பரப்புரையை திமுக தொடர்ந்து மேற்கொள்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது போல 2014 முதல் வசூலிக்கப்பட்ட வரியை விட தமிழகத்திற்கு அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















