பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி என்.என்.கனிகாவுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். லாரி ஓட்டுநரான தமது தந்தை நன்கு படிக்க வைத்தால்தான் பிளஸ் டூ சிபிஎஸ்சி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடிந்ததாகவும், நாட்டின் பிரதமர் எங்களுடன் கலந்துரையாடியதை மிகவும் பெருமையாக கருதுவதாகவும் மாணவி என்.என்.கனிகா தெரிவிக்கிறார்.

எஸ்.கே.நடராஜன், மாணவியின் தந்தை, கனரக லாரி ஓட்டுநர், நாமக்கல்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. பிரதமர் வானொலியில் ஆற்றும் 67-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி இதுவாகும். இன்று பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போது நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை லாரி ஓட்டுநர் எஸ்.கே.நடராஜன் என்பவரின் மகள் N.N. கனிகா (N.N.KANIGA), சிபிஎஸ்இ ப்ளஸ் டூ-2020-பொதுத்தேர்வில் தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்ததை குறிப்பிட்டு பேசினார். ஏழை குடும்பத்தில் பிறந்து மிக நல்ல முறையில் கல்வி கற்று இன்று மருத்துவராக வரவேண்டும் என்ற கனவுடன், லட்சியத்துடன் தமது கல்வி பயணத்தை தொடரும் மாணவிக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், மாணவிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் தமது கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
மேலும் அவரது சகோதரி ஷிவானி என்பவர் அவரும் மருத்துவம் படித்து வருவதையும் பிரதமர் பாராட்டினார். ஏழை குடும்பத்தில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் மிக நல்ல முறையில் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும் என்றும் அப்போது கூறினார்.


என்.என்.கனிகா, சாதனை மாணவி – ஆர்.ஜோதி, மாணவியின் தாய், நாமக்கல்.
இதுகுறித்து பிரதமரிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் எங்களை ஊக்குவிக்கும் வகையில் அவரின் பேச்சு அமைந்திருந்ததாகவும் நாமக்கல் கனரக லாரி ஓட்டுநர் நடராஜன்-ஜோதி தம்பதியினர் மற்றும் அவரது மகள் N.N. கனிகா ஆகியோர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.