நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாங்குநேரியில் மாணவர்களை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் திமுக ஒன்றிய செயலாளரின் உறவினர்கள் உள்பட சக மாணவர்கள் ஆறு பேரை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.மேலும் ஒருவரை இன்று கைது செய்துள்ளார்கள் காவல்துறை
இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பல கேள்விகளை வைத்துள்ளார்:
நாங்குநேரி கொடூரத்தில் ஜாதி திமிரை விட அதிகாரத்திமிர் கோலோச்சி உள்ளதே உண்மை. நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளரின் அண்ணன் மகன் அப்பாவி சின்னத்துரையை வெட்டிய போது பேசிய வார்த்தைகள் ஜாதித்திமிரை விட அதிகாரத்திமிரை தான் காட்டுகிறது. நாங்கள் காலம்காலமாக சொல்லும் குடும்ப அரசியல், அதிகார துஷ்ப்ரயோகம் ஆகியவற்றின் மொத்த உருவமாக தி.மு.க இன்று உருவெடுத்து தமிழக அரசியல் களத்தை குட்டிச்சுவராக்கி இருக்கிறது.
இதே இடத்தில் ஒரு பா.ஜ.க அல்லது அ.தி.மு.க அரசியல்வாதி இருந்திருந்தால் இந்நேரம் தமிழக ஊடகவியலாளர்களும், நடுநிலை வேடமிடும் ஓநாய்களும் 24*7 இப்பிரச்சனையை ஊதி பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேடி இருப்பார்கள். தமிழகம் முழுக்க, சமூக ஊடகங்கள் முழுக்க விவாத பொருளாகி இருக்கும்.
ஆனால், சம்பந்தப்பட்டது தி.மு.க அரசியல்வாதி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் #சுடலைகண்ணு என்பதால் வாய் மூடி மெளனம் காத்து செய்வதறியாது தவிக்கின்றனர். பெயருக்கு நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் இயக்குனர் பா.ரஞ்சித் போன்றவர்கள் கூட தவறிழைத்த தி.மு.க நிர்வாகி மீது நேரடியாக கண்டனம் தெரிவிக்க அஞ்சும் சூழ்நிலையே இங்கு உள்ளது.
உங்கள் “அறச்சீற்றம்” குற்றவாளிகளின் அரசியல் சார்பை பொறுத்து அமைகிறது என்றால் நீங்கள் வாழ்வதற்கே தகுதியற்ற மனிதாபிமானமற்ற மிருகங்கள் என்பதே உண்மை.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் சுந்தரராஜனோ ஒரு படி மேலே போய் இந்த சம்பவத்திற்கு “சனாதனம்” தான் காரணம் என கூச்சமே இன்றி தி.மு.க-வின் ஊதுகுழலாக பேசுகிறார். என்ன வாழ்க்கை இதெல்லாம் பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜ்
நாங்குநேரி சம்பவத்தை குறித்து உண்மையில் கவலை கொள்பவர்கள் குறைந்தபட்ச நேர்மையுடனும், அறத்துடனும் தி.மு.க-வின் அதிகாரத்திமிரை கண்டித்து குரல் கொடுங்கள். ஜாதிய திமிரை விட தி.மு.க-வின் அதிகாரத்திமிர் கோரமானது என்பதை தமிழக அரசியல் வரலாறு நமக்கு பல முறை எடுத்துரைத்துள்ளது. என பல கேள்விகளை எழுப்பியுள்ளார் பாஜக மாநில செயலாளர் Dr. SG சூர்யா.