யூடியூப் சேனலில் 2 கோடி சந்தாதாரர்களை பெற்ற பிரதமர் மோடி சமூக வலைதள பக்கங்களிலும் சாதனை படைத்தது வருகிறார். பாரத பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் புதிய யுக்திகளை கையாள்வதில் மிக சிறந்தவர். தற்போதைய காலங்களில் சமூக வலைதளத்தின் முக்கியத்துவம் புரிந்து சமூக வலைத்தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை தொடர்வோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பேஸ்புக்கில் 4.8 கோடி பேர் பிரதமர் மோடியை பாலோவ்ர்ஸ்களாக உள்ளார்கள் டுவிட்டர் பக்கத்தில் , 9.4 கோடி பேர் இருக்கிறார்கள் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் 8.3 கோடி பேர், வாட்ஸ் ஆப் சேனல், 1.8 கோடி நபர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள், யூ டியூப் சேனல் 2 கோடி சந்தாதாரர்களை பெற்று சாதனை படைத்தது வருகிறார். சமூக வலைத்தளங்கள் மூலம் அரசின் கொள்கைகள் குறித்த தகவல், அரசு நிகழ்ச்சிகள், திட்டங்கள், திட்டங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகிறது.
பிரதமர் மோடியின் யுடியூப் சேனல், சந்தாதாரர் எண்ணிக்கை மற்றும் வீடியோ பார்வை ஆகிய இரண்டிலும் உலக தலைவர்களை எஞ்சி உள்ளது. யூடியூப் சேனலில் 2 கோடி சந்தாதாரர்களை கொண்ட ஒரே உலகத் தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார்.
அவரது வீடியோக்கள், 450 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு சாதனை தான். தற்போதைய அரசியல் தலைவர்களில் அனைத்துவித சமூக வலைதளங்களை பயன்படுத்தும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இந்நிலையில், யூடியூப்பில் 2 கோடி சந்தாதாரர்களை பெற்ற முதல் உலக தலைவர் என்ற பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது பக்கத்திற்கு 450 கோடி பார்வைகளும் கிடைத்துள்ளன.