Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பாக்கின் உயிர்நாடியை நிறுத்திய இந்தியா.. குறி வெச்சாச்சு..பாக் வங்கிகள் ஏலம்… கதறி துடிக்கும் பாக்..

Oredesam by Oredesam
May 4, 2025
in இந்தியா, உலகம், செய்திகள்
0
MODI!

MODI!

FacebookTwitterWhatsappTelegram

பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளது. பயங்கரவாத பாகிஸ்தானுக்கு மேலும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை இந்தியா தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உருக்குலைந்து கிடக்கிறது பாகிஸ்தான் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்து வருகிறது. பல வங்கிகள் ஏலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறன. பிரதமர் மோடி ஆயுதங்களை வைத்து போரை தொடங்கவில்லை என்பது மட்டும் புரிகிறது. ஆனால் தற்போது பாகிஸ்தான் மீது போர் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

2008ம் ஆண்டு நடந்த கொடூரமான மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல்தான் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களைக் காவு வாங்கியிருக்கிறது.பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்திய இந்தியா,அட்டாரி எல்லையை மூடியது.தூதரக உறவுகளைத் துண்டித்தது. நாட்டில் உள்ள பாகிஸ்தான் மக்களை வெளியேற்றியது. வர்த்தக உறவுகளை நிறுத்தியது. வான்வெளியுடன் கடல்வழியையும் பாகிஸ்தான் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் அஞ்சல் சேவைகளை நிறுத்தியது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

முப்படைகளுக்கும் பிரதமர் மோடி, முழு சுதந்திரம் அளித்துள்ள நிலையில், இந்தியா எப்போது பதிலடி கொடுக்குமோ எனத் தெரியாமல் பாகிஸ்தான் கடும் அச்சத்தில் உள்ளது. இந்நிலையில், பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தான் மீது இரண்டு முக்கிய நடவடிக்கைகளை இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.முதலில், நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சேர்ப்பது. தொடர்ந்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ப்பது; இரண்டாவது, அந்நாட்டுக்கான சர்வதேச நிதி ஆணையத்தின் நிதியுதவிகளைத் தடுப்பது.

நிதி நடவடிக்கை பணிக்குழு (The Financial Action Task Force – FATF) என்பது, 1989ம் ஆண்டு, G7 நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை எதிர்ப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.பணமோசடி எதிர்ப்பு (AML) மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி (CTF) கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை FATF அமைக்கிறது. உலக அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றன.

நிதி மோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி ஆகிய குற்றங்களைச் செய்யும் நாடுகள் முதலில் சாம்பல் பட்டியலில் வைக்கப்படும். சாம்பல் பட்டியலில் இருந்தும் தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நாடுகள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் 2012 முதல் 2015 வரை சாம்பல் பட்டியலில் இருந்த பாகிஸ்தான், மீண்டும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக 2018ம் ஆண்டு மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டது.FATF-ன் நிர்ப்பந்தம் காரணமாகவே, லக்க்ஷர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீது உட்பட மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது. அதன்பிறகு, FATF-ன் சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. அப்போதே இந்தியா, பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க வற்புறுத்தியது.

இப்போது பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குபின், பாகிஸ்தானைக் கருப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா FATFக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்து வருகிறது.இதற்கிடையே, பாகிஸ்தானுக்குச் சர்வதேச நாணய நிதியம் வழங்க ஒப்புக்கொண்டுள்ள 7 பில்லியன் டாலர் உதவியைத் தடுப்பது என்ற நடவடிக்கையும் இந்தியா எடுக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம், பாகிஸ்தானுக்கான கடன் திட்டத்தை மறுபரிசீலனை செய்யப் பாகிஸ்தானுக்குச் சென்ற IMF குழுவிடம், இந்த ஜூலை மாதத்துக்குள் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை விற்பனை செய்வதாகச் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் உறுதியளித்தது.மேலும், Zarai Taraqiati Bank Limited, First Women Bank Limited மற்றும் நாட்டின் ஒரே வீட்டுக்குக் கடன் விளங்கும் நிறுவனமான House Building Finance Company Limited ஆகிய முக்கிய மூன்று நிதி நிறுவனங்கள் மற்றும் பைசலாபாத், இஸ்லாமாபாத் மற்றும் குஜ்ரான்வாலா ஆகிய மூன்று மின் விநியோக நிறுவனங்கள் உட்பட ஏழு நிறுவனங்களையும் விற்று விடுவதாகவும் பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் தான், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்வாங்கும் பாகிஸ்தான் அந்த நிதியைப் பயங்கரவாதத்துக்குப் பயன்படுத்துகிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, ஆதரவளித்து, ஆயுதப் பயிற்சியளித்து, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து வந்ததாகப் பாகிஸ்தானின் இராணுவ அமைச்சர் கவாஜா ஆசீஃப், தொலைக்காட்சி நேர்காணலில், ஒப்புக்கொண்டுள்ளார்.இந்த வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலத்தை ஐநா சபையில் சுட்டிக்காட்டிய இந்தியா, உலகம் இனி கண்மூடித்தனமாக இருக்க முடியாது என்று வலியுறுத்தி உள்ளது.

கருப்பு பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்க்க இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போகும் மற்றும் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும். பாகிஸ்தானிடம் வெளிநாட்டுக் கையிருப்பு இல்லாமல் போகும். நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக அழியும். ஈரான் உட்பட மற்ற நாடுகளுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும். பாகிஸ்தானுடன் எந்த நிதி நிறுவனமும் ஒப்பந்தம் செய்யாது.மொத்தத்தில் பாகிஸ்தான் பாலைவனமாகும். இதைத்தான், யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பதிலடி இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியதாகத் தெரியவந்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ராமர் ஆலயத்திற்கு ஆதரவு தெரிவித்த…! ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம்..!

August 10, 2020
சீனாவால் தயாரிக்கப்பட்டது கொரோனா வைரஸ் நோபல் பரிசு பெற்ற அறிஞர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

சீனாவால் தயாரிக்கப்பட்டது கொரோனா வைரஸ் நோபல் பரிசு பெற்ற அறிஞர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

April 19, 2020
ராசிகளில் தோஷ ராசி என்று உண்டா? தோஷம் என்றால் என்ன?

ராசிகளில் தோஷ ராசி என்று உண்டா? தோஷம் என்றால் என்ன?

September 11, 2025
யாருங்க இந்த சுஷாந்த்.? எதற்காக புலனாய்வு ? மாஃபியா கும்பலால் கொல்லப்பட்டாரா சுஷாந்த் !

யாருங்க இந்த சுஷாந்த்.? எதற்காக புலனாய்வு ? மாஃபியா கும்பலால் கொல்லப்பட்டாரா சுஷாந்த் !

August 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x