கல்வி தகுதி உள்ளிட்ட தனிநபர் விபரங்களை வழங்கினால் மட்டுமே, இனி மாத அட்டைதாரர்களுக்கு பால் தர முடியும் என, ஆவின் அதிகாரிகள் கூறியுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து, ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆவின் பால் அட்டை வவ்குவதற்கு புது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் ஓரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,. ஆவின் நிறுவனத்தில் பால் அட்டை வாங்க வேண்டும் என்றால் மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்கள்உள்ளிட்ட தனிநபர் விபரங்கள் கேட்கப்படுகின்றன. இந்த விபரங்களை தந்தால் தான், அடுத்த மாதம் பால் தர முடியும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தனிநபர் விபரங்கள், தவறாக பயன்படுத்தப் பட்டால், பலருக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எதற்காக, இந்த நடைமுறையை பின்பற்றப் போகிறோம் என, ஆவின் நிறுவனத்திடம் இருந்து தெளிவான அறிவிப்பு இல்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்கள் பற்றிய விவரங்கள் தொகுப்பிற்காக பெயர், முகவரி, பிறந்த இடம், வசிக்கும் இடம், ஆதார் எண் போன்ற விவரங்களைக் கேட்டபோது திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வானத்திற்கும், பூமிக்கும் குதித்தனர்.
ஆனால், இப்போது ஆவின் பால் அட்டை மூலம் வாங்குபவர்கள் பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொழில், மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்கள், எவ்வளவு காலமாக பால் வாங்கப்படுகிறது, ஆதார் எண், குடும்ப அட்டை எண், வருமானவரி நிரந்தர கணக்கு எண், ஓட்டுநர் உரிமம் எண், வங்கிக் கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றில் ஒன்று போன்ற விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்குமாறு ஆவின் நிர்வாகம் கோரியுள்ளதாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளித்தன.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கல்வித் தகுதி, தொழில் விவரம், மாத வருமானம், ஆதார் எண் ஆகிய விவரங்களை தரத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், பால் அட்டைதாரர்கள் தங்களது விவரங்களை அளிக்க 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு 9-8-2021 திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. பால் வாங்குவதற்கு எதற்கு இந்த விவரங்கள்…? இது தான் விடியல் ஆட்சியா…?