கலைஞர் செய்தி சுட்ட வடை! பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்களின் முகத்தில் கரி பூசிய தங்கமகன் நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு மிகப்பெரிய கவுரவத்தையம் நிம்மதியை வழங்கினார் நாடே நீரஜ் சோப்ராவின் இந்த வெற்றியை கொண்டாடி வரும் வேளையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது உள்ள வன்மத்தால் கலைஞர் செய்தி ஜூன் 21-ஆம் தேதி ஆங்கில நாளேடு ஒன்று அந்த கட்டுரையின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் உவே ஹான் என்பவர் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் என்றும் அவர் ஸ்போட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் தங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள் மேலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சி குறித்து மத்திய அரசிடம் எந்த ஒரு உதவியும் வழங்குவதில்லை அரசின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு 6 இந்திய அதிகாரிகள் தன்னை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்

ஆனால் ஆங்கில நாளேடு இந்த கட்டுரை வெளி வந்த அடுத்த நாளே இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார் நீரஜ் சோப்ரா இந்திய அரசாங்கம் தனக்கு செய்த பல உதவிகளை செய்தது மட்டுமல்லாமல் ஊக்கப்படுத்தியதையும் கூறியுள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நீரஜ் சோப்ரா

ரொம்ப முக்கியமான தகவல் என்னவென்றால் 2019ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற போல்டர் திரட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நீரஜ் சோப்ரா தேர்வு பெறும் வாய்ப்பை தவற விட்டதால் சோப்ரா மற்றும் இந்திய அரசாங்கம் பயிற்சியாளர் உவே ஹான் மீது அதிருப்தி அடைந்தனர் அதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்

அன்று முதல் ஜெர்மனியை சேர்ந்த கிளாவ்ஸ் நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சி அளித்து வருகிறார் அதுமட்டுமின்றி கோடிக்கணக்கான ரூபாய் நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்காக மத்திய அரசு செலவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மத்திய அரசு உதவி நீரஜ் சோப்ரா அவர்களின் கடின உழைப்பு முயற்சி ஆகியவற்றால் தான் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது என்பதை திமுக ஆதரவு சேனலுக்கு பிடிக்கவில்லை. என்பது இந்த செய்தியின்மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நம் நாட்டு வீரர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது திமுக ஆதரவு பெற்ற ஊடகமான கலைஞர் தொலைக்காட்சியில் சகித்துக்கொள்ள முடியாதது ஏன் என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி

Exit mobile version