காங்கிரஸின் கோட்டையான உபியிம் குஜராத்தும் சோனியா காலத்தில் கைவிட்டது ஏன்?
ஏன் கைகழுவினார்கள்? சோனியாவினை யாருக்கும் பிடிக்கவில்லை என்பதுதான் யதார்த்தம். பாஜக விருப்பமான கட்சி அல்ல என்றாலும் சோனியாவுக்க்கு அது பரவாயில்லை என மகிழ்வாக ஏற்றார்கள்.
30 வருடமாக ஒரு கட்சிக்கு பெரும் வெற்றி பெற்று தரமுடியாத ஒருவரை நோக்கி மானமுள்ள காங்கிரஸ்காரன் என்றால் கேள்வி எழுப்புவான்
ஆனால் தங்கள் மேலுள்ள தவறை மறைக்க சங்கி சங்கி என பழித்து கொண்டிருப்பவனை நினைத்தால் பரிதாபமே மிஞ்சும்
ஏன் இந்தியா சோனியாவினை ஒதுக்கியது?
அவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை வலுத்தன, இந்திரா கொலையில் தவான் கொடுத்த வாக்குமூலத்தை விடுங்கள். எங்கு ராஜிவ் சென்றாலும் ஒட்டி கொண்டிருந்த சோனியா ராஜிவ் இலங்கை விவகாரத்தில் தலையிட்டதில் இருந்து ஒதுங்கினார்
அதன்பின் தனியே சுற்றிய ராஜிவ் தனியாகவே செத்தார்
சரி அவருக்கு பின் அதிகாரத்துக்கு வந்த சோனியா ராஜிவ் கொலைக்கு என்ன பரிகாரம் தேடினார்?
சந்திராசாமி, சு.சாமி என ஆளாளுக்கு நீங்கள் கைநீட்டுங்கள் ஆனால் சர்வ அதிகாரம் பெற்ற சோனியா அவர்களை என்ன செய்தார்?
வை.கோ, கருணாநிதி விசாரணைக்கு வரவேண்டாம் என தடுத்த சக்தி எது?
ஜெயின் கமிஷன் அறிக்கையினை சோனியா தூர எறிந்தது ஏன்?
பிரிவினைவாத கட்சி என ராஜிவால் முத்திரை குத்தபட்ட திமுகவுடன் சோனியா கரங்களை இறுக்கி கொண்டதேன்?
கடைசி வரை இத்தாலிய தொடர்பினை சோனியா விடாதது ஏன்?
சோனியா காலத்தில் நுழைந்த இத்தாலிய ஆயுத தரக் கோஷ்டி, அகஸ்டா ஹெலிகாப்டர் வரை தொடர்ந்தது ஏன்?
விமானபடையோ இல்லை ஹெலிகாப்டரோ பயன்படுத்தி பிரபாரகனை தூக்கவோ கொல்லவோ சோனியா முயற்சிக்காதது ஏன்?
அட பிரபாகரனை விடுங்கள், ஆண்டன் பாலசிங்கத்தை கூட தொடமுடியாமல் இந்திய கரங்களை கட்டிபோட்ட சக்தி எது?
ராஜிவ் குற்றவாளிகளை மன்னித்த சோனியா, 2009 வரை புலிகளை காக்க ரா அமைப்புக்கு அதிகாரம் வழங்கியது ஏன்?
ஏகபட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை, ஆனால் வட இந்திய சகோதரர்களிடம் இருந்தது, சோனியா சந்தேகத்துகுரியவர் என கைகழுவினார்கள்
நீங்கள் அந்த கையினை பிடித்து தொங்கி கொண்டே இருங்கள்
ஆனாலும் சசிகலா குடும்பத்தையே ஒதுக்கிவிட்ட பழனிச்சாமி கோஷ்டியிடம் கூட அரசியல் பயில தெரியாத உங்களை நினைத்தால் பரிதாபமே மிஞ்சும்