குடியரசுத் தலைவரும்,பிரதமரும் இன்று நடைபெறும் தேசிய கல்விக் கொள்கை-2020மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார்கள்.!

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை 2020சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இருக்கும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.36 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கல்விக் கொள்கையைப் கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். 

7 செப்டம்பர் 2020 அன்று காலை 10.30 மணிக்கு காணொளி மூலம் நடைபெற உள்ள தேசிய கல்விக் கொள்கை-2020குறித்த ஆளுநர்களின் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உரையாற்ற இருக்கிறார்கள்.

‘உயர்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பங்கு’ என்னும் தலைப்பிலான இந்த மாநாட்டை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையான தேசிய கல்விக் கொள்கை-2020, முந்தைய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 36ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.

7 செப்டம்பர் அன்று நடக்கவிருக்கும் ஆளுநர்களின் மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள்,அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

குடியரசுத் தலைவர்,பிரதமர் ஆகியோர் இந்த மாநாட்டில் அனைவருக்கும் வழங்கும் உரை, டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கட்டுரை :- எழுத்தாளர் சுந்தர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version