Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அனைவருக்கும் சமநிலையான கல்வி வழங்கவழி வகுத்துள்ளது தேசிய கல்விக் கொள்கை: குடியரசுத் தலைவர் பேச்சு.

Oredesam by Oredesam
September 19, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

21வது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி நடைமுறையில் மறுசீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பங்கேற்பு மற்றும் செம்மையாக்கல் மூலம் இந்த நிலையை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தரமான கல்வி அளிப்பதன் மூலம்,  சமநிலையிலான, துடிப்பு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கான லட்சியப் பாதையை இது வகுக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். `உயர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துதல்’ என்ற தலைப்பில் இன்று நடந்த பார்வயாளர்கள் மாநாட்டின் தொடக்க உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

கல்வி அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளையும், கொள்கையை உருவாக்க பாடுபட்ட டாக்டர் கஸ்தூரிரங்கன் மற்றும் அவருடைய குழுவினருக்கும் குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 12,500க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 675 மாவட்டங்களில் விரிவான  ஆலோசனைகள் நடத்தி, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். அதனால் கள அளவிலான புரிதலை இந்தக் கொள்கை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

உயர் கல்வி நிலையங்களை ஊக்குவித்த அவர், இந்தியாவை உலக அளவில் அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாடாக உருவாக்குவதில் இந்தக் கல்வி நிலையங்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது என்று கூறினார். இந்தக் கல்வி நிலையங்கள்  உருவாக்கும் தரநிலை மதிப்பீடுகளை மற்ற கல்வி நிலையங்களும் பின்பற்றும் என்று அவர் தெரிவித்தார். தர்க்கரீதியிலான முடிவெடுத்தல் மற்றும் புதுமை சிந்தனை செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கு ஆக்கசிந்தனை மற்றும் கூர்ந்து சிந்தித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய விஷயங்கள் இந்தக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகளில் இடம் பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்தார். ஆசிரியர் மற்றும் மாணவருக்கு இடையில் தாராளமான தகவல் தொடர்பு மற்றும் கலந்துரையாடல் அம்சங்களை வலியுறுத்தும் வகையில் பகவத் கீதை மற்றும் கிருஷ்ணர்-அர்ஜுனர் கலந்துரையாடல்களை குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். ஆழ்ந்து சிந்தித்தல் மற்றும் விசாரித்து தெரிந்து கொள்ளும் உத்வேகத்திற்கு ஊக்கம் அளிப்பதாக தேசிய கல்விக் கொள்கை உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார். இந்தக் கொள்கையை சிறப்பாக அமல் செய்யும்போது, தட்சஷீலா மற்றும் நாளந்தா காலத்தில், கல்வியில் இந்தியா பெற்றிருந்த பெருமைகள் மீண்டும் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையின் புதிய அம்சங்கள் பற்றி விவரித்த அவர்,  கல்வி மதிப்பு புள்ளிகள் வங்கி திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் பெற்ற கிரெடிட் புள்ளிகள் இதில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும். மாணவர்கள் ஈட்டியிருக்கும் புள்ளிகளின் அடிப்படையில் அவர்களுக்கு பட்டம் வழங்கப்படும். இதனால் மாணவர்கள் தங்களுடைய தொழில் திறன் பயிற்சிக் கல்வி,  தொழிற்கல்வியை தேர்வு செய்ய முடியும். மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது மற்றும் விலகுவதற்கான சுதந்திரமும் இதன் மூலம் கிடைக்கும். பி.எட்., தொழிற் பயிற்சி மற்றும் தொலைதூரக் கல்வி திட்டங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் வகையிலும் இந்தக் கொள்கை அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உயர் கல்விக்குப் பதிவு செய்வோர் அளவை 2035க்குள் 50 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் மேன்மைப்படுத்திப் பேசினார். இந்த இலக்கை எட்டுவதற்கு ஆன்லைன் கல்வித் திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிய அவர், கல்வி நிலையங்களுக்கு நேரில் செல்ல முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி அளிக்கவும் இதை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். சர்வதேச மாணவர்களும் இந்த நடைமுறையில் பயன்பெறலாம் என்றார் அவர். 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி குறித்த அனைந்திந்திய கணக்கெடுப்பின்படி, உயர்கல்விக்குச் செல்லும் பெண்களின் விகிதம், ஆண்களைவிட சற்று அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இருந்தாலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாக உள்ளது, குறிப்பாக தொழில்நுட்பக் கல்வியில் இந்த நிலை உள்ளது என்றார் அவர். சமத்துவம் மற்றும் பங்கேற்பில் கவனம் செலுத்துவதாக இந்தக் கொள்கை உள்ளது என்ற நிலையில், உயர் கல்வியில் பாலின பாகுபாடு சரி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி நிலையங்களின் தலைமைகள் தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே, இந்தக் கொள்கையை அமல் படுத்துவதில் அமைப்புகளின் தலைவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தொடக்க உரையாற்றினார். தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்வதில் உள்ள எல்லா தடங்கல்களும் நீக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தன் உரையில் கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

May 14, 2020
10,000 கோடி ஊழல் பிளான்! தமிழக அரசை நிலைகுலைய வைத்த அடுத்த சம்பவம்! பாஜக SR.சேகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ! #381பாஜக

10,000 கோடி ஊழல் பிளான்! தமிழக அரசை நிலைகுலைய வைத்த அடுத்த சம்பவம்! பாஜக SR.சேகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ! #381பாஜக

October 19, 2021
Annamalai vs Udaynithi

ஆளுநரை தேர்தலில் நிற்க சொன்ன உதயநிதியால் குரூப்-4 தேர்வெழுத முடியுமா? -அண்ணாமலை சவால்!

August 22, 2023
தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கிய ஸ்டார்ட் அப் இந்தியா!

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கிய ஸ்டார்ட் அப் இந்தியா!

July 24, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x