நேபாளத்தில் மீண்டும் மோடி மேஜிக் சிறப்பாக ஸ்கைட்ச் போட்டு தூக்கிய அமித்ஷா.

சமீபகாலமாக இந்தியாவுடன் வம்புக்கு நின்ற நேபாளம் இப்பொழுது அமைதியாகி விட்டது.

அதோடு மோடியின் கனவு
திட்டமான பீகார் டூகாத்மண்டு எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்திற்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்து விட்டது.


மோடி 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாளம் சென்று இருந்த பொழுது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால்
அதற்கு பிறகு சீனாவின் பேச்சைக் கேட்டு நேபாளம் கண்டு கொள்ளாமல் இருந்தது .

இப்பொழுது மோடி என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை. நேபாளம் ஓகே சொல்லி விட்டது.

பீகாரில் உள்ள கிழக்கு சம்பரண் மாவட்ட த்தில் ரக்சல் ரயில் நிலையத்தில் இரு ந்து நேபாள தலைநகர் காத்மண்டுக்கு
சுமார் 136 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு விரைவு ரயிலை அனுப்பி வைக்க இருக்கிறது இந்திய அரசு.

சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை இந்தியா செயல்படுத்த
இருக்கிறது.கொங்கண் ரயில்வே கார்பரேசன் லிமிடெட் நிறுவனம் இந்த திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது.

இது நிச்சயமாக மெகா ப்ராஜெக்ட் தான் ஏனென்றால் இந்த ரயில் பாதையில்

39 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட இருக்கிறது அதாவது 42 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதைகள் வழியாக
தான் ரயில் செல்ல இருக்கிறது.

அதோடு 32 ரோடு பாலங்கள், 53 அண்டர்பாஸ்கள், 259 சிறிய பாலங்கள் மற்றும் 41 பெரிய பாலங்கள் இந்த பீகார் டு நே பாளம் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது.

இப்பொழுது தான் உத்தரகாண்ட் மாநில த்தில் உள்ள தர்ச்சுலா என்ற இடத்திலி ருந்து சீன எல்லையில் உள்ள லிப்பு லேக் பாஸ் வரையில் 80 கிலோ மீட்டர் தூரத்தி ற்கு ஒரு சாலை அமைத்து கைலாய யாத்திரை செல்வதற்கு இருந்த தொலை வை குறைத்தது மோடி அரசு.

அதற்கு பிறகு தான் நேபாளம் அந்த வழி பாதையில் காலாபானி, லிம்பியதுரா இடங்கள் நேபாளத்திற்கு சொந்தமான இடங்கள் என்று வம்புக்குநின்றது. இந்தியா எங்களின் பகுதிகளை ஆக்கிரமிப்புசெய்து இருக்கிறது என்று நேபாள மேப்பில் அந்த இடங்களை இணைத்து சர்வதேச பிரச்சினையாக கொண்டு சென்றது நேபாளம்.

கடந்த மே மாதத்தில் இருந்த இந்த மேப் பஞ்சாயத்து தான் இந்தியா நேபாளம் இடையே ஓடிக் கொண்டு இருந்தது.

அப்புறம் சில மாதங்களுக்கு பிறகு நேபாளத்தில் இருந்து சவுண்டே காண வில்லை என்னடா இது நேபாளம் ஏன் இப்பொழுது அமைதியாகி விட்டது? என்று யோசித்து கொண்டே இருந்தேன்.

அப்பொழுது தான் ஒரு செய்தியை படித்தேன் அதாவது கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் உளவு அமைப்பான ராவின் தலைவர் சமந்த் கோயல் திடீரென நேபாளம் சென்று நேபாள பிரதமர் ஷர்மா ஒளியை சந்தித்தார் என்கிற செய்தியை படித்தேன்.

நேபாள மீடியாக்கள் நேபாள அரசின் உ யர் மட்ட அதிகாரிகள் கூட்டணி கட்சியான நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தா என்று நேபாள அதிகார மையத்தில் உள்ள யாரு க்குமே தெரியாமல் நடைபெற்றது அந்த சந்திப்பு.

நேபாள பிரதமரை ரா அமைப்பின் தலைவரான சமந்த் கோயல் சந்தித்த பிறகு நேபாள பிரதமரிடம் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் ரா தலைவர் நேபாள பிரதமர் ஷர்மா ஒளியிடம் என்ன கூறினார் என்று இதுவரை தெரிந்தவர்கள் மூன்று பேர் தான்

ஒருவர் பிரதமர் மோடி அடுத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னொருவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ரா தலைவர் நேபாள பிரதமரை சந்தித்த பிறகு நேபாள அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்பு துறையை பறித்தார்
ஷர்மா ஒளி.

இந்த ஈஸ்வர் போக்ரால் தான் இந்திய ராணுவத்தில் உள்ள கூர்க்கா ராணுவத்தை
இந்தியாவுக்கு எதிராக செயல்பட வைக்கவேண்டும் என்று சவுண்ட் விட்டு கொண்டு இருந்தார்.

என்ன தான் மேஜிக் காட்டினாரோ சமந்த்கோயல் தெரியவில்லை. ஒற்றை சந்திப்பில் நேபாள பிரதமர் இந்தியாவிடம் முழுமையாக சரண்டராகி விட்டார்.

அதற்கு பிறகு இந்திய ராணுவ தலைவர் மனோஜ் முகுந்த் நரவனே வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா என்று
பலரும் நேபாளம் சென்றார்கள்.

நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றால் அதற்கு இந்தியா நேபாளம் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் பொழுது இந்திய நேபாள மக்களிடையே நல்ல உறவும் வர்த்தகமும் அதிகரிக்கும் என்று இந்தியா எடுத்து சொல்ல
நேபாளம் ஓகே கூறி இருக்கிறது.

மோடி பிரதமராக வந்த பிறகு நேபாள த் திற்கு நிறைய நன்மைகளை செய்து இருக்கிறார்.

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு குழாய் வழியாகவே பெட்ரோல் டீசல் அளிக்கும் வகையில் மோதி ஹரி-அம்லேஹஞ்ச் ப்ராஜெக்ட் டிற்கு 2017 ஆகஸ்ட் இறுதியில் தன்னுடைய நேபாள பயணத்தின் பொழுது அறிவித்தார்.

சுமார் 375 கோடி ரூபாய் செலவில் இந்தியா அமைத்துள்ள இந்த குழாய் வழி பெட்ரோல் பாதை தெற்கு ஆசியாவின் முதல் குழாய் வழிபெட்ரோல் பாதையாகும்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நேபாளத்தில் வாழும் இந்திய வம்சாவளியினர்களான மாதேசிகளின் பூர்வீக மண்ணில்
இருந்து மோதி ஹரியில்இருந்து 69 கிலோ மீட்டர் தொலைவிற்கு மண்ணுக்கடியில் குழாய்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் வழியாக பெட்ரோல் டீசல் அனுப்பப்பட்டு நேபாளத்தில் உள்ள அம்லேகஞ்ச் என்கிற இடத்தில் உள்ளராட்சஷ தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.

பிறகு அங்கிருந்து நேபாளத்தில் உள்ள பெட்ரோல் டீசல் சப்ளையர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனால் இந்திய நேபாள பாதையில் வாகன போக்குவரத்து சுலபமாகும். அதோடு இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பெட்ரோல் டீசல் கொண்டு செல்ல ஆகும் காலமும் எரிபொருளும் மிச்சமாகிறது.

இப்படி மோடி வந்த பிறகு நேபாளத்திற்கு பல நன்மைகளை செய்தாலும் சீனா ஆதரவுடன் அங்கு கம்யூனிஸ்ட் அரசு அமைந்த பிறகு இந்தியா நேபாளம் இடையே மோதல் வந்து கொண்டே இருக்கிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நேபாளத்தில் கம்யூனிஸ்ட்களை அட்ரஸ் இல்லாமல் செய்ய இந்துத்வா அரசியல் தீவிரமாக்ப்பட்டு வருகிறது.

அதனால் விரைவில் நேபாளம் இந்து நாடாக அறிவிக்கப்பட்டு நேபாளம் முழுவதும் சிவப்பு கொடிகள் மறைந்து காவிக் கொடிகள் பறக்க வைத்து நேபாள அரசை மாற்றிக்காட்டுவார் மோடி.

Exit mobile version