நீட் தேர்வு இன்று! உதயநிதியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
உதாரு விட்ட உதய்!
நீட் தேர்வு இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ், மலையாளம், பஞ்சாபி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படவுள்ளது.
மேலும் மாணவர்களின் நலன் கருதி இந்தியா முழுவதும் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 லிருந்து 198 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை எழுத 1,10,971 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 40,376 மாணவர்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவரை சேர்ந்த ஒருவரும் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளார்கள்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 17,992 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
பொதுவாக நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளுடன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இணைந்து தேர்வு நடத்தப்படவுள்ளது. கைகளில் கிளவுஸ், மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் முக்கியமான ஒன்று நீட் தேர்வு ரத்து . திமுகவனின் பிரச்சார முழக்கம் நீட் தேர்வு ரத்து, தான் சட்டமன்ற கூட்ட தொடரின் முதல் கையெழுத்து என திமுக தலைவர் பிரச்சாரம்.
நீட் தேர்வை எப்படி ரத்துசெய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அந்த ரகசியத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்து காட்டுகிறோம். அடிமை அரசாக இருக்காது என உதயநிதியின் பில்டப் வேற லெவலில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நீட் ரத்து செய்வார்கள் என மக்களை நம்ப வைத்தார்கள் திமுகவினர்.
நீட் தேர்வை ரத்து செய்வது தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது இல்லை என்று பலர் கூறி வந்தபோதிலும் திமுக அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று வாக்குறுதியை தொடர்ந்து வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து என்ற தேர்தல் அறிக்கை மற்றும் நீங்கள் வைத்திருந்த ரகசியம் என்ன ஆச்சு உதய் என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். உதாருவிட்டஉதய் என ட்ரெண்ட் செய்கிறார்கள்