தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள் ஒரு சார்பு நிலை உடையவை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! வட மாநிலங்களில் எதாவது பிரச்சனை என்றால் அன்றைய தினம் தமிழக செய்தி சேனல்களில் பிரேக்கிங் விவாதம் நொடிக்கு நொடி செய்திகள் என மக்களின் கவனத்தை வட மாநிலங்கள் மீது திசை திருப்புவது வழக்கம்.
தமிழக ஊடகங்கள் தி.மு.கவின் ஊடகங்களாவே செயல்பட்டு வருகிறது. மேலும் இந்துக்கள் நடத்தும் பள்ளியில் ஒரு ஆசிரியர் ஏதாவது தவறு செய்தால் அந்த பள்ளி மற்றும் இந்துக்கள் தான் தவறு செய்பவர்கள் என்று மக்களிடம் திணிப்பார்கள்.
மற்ற மதத்தினர் நடத்தும் பள்ளி கல்லூரிகள்கல்லூரி நிர்வாகமே தவறு செய்திருந்தால் வாயை மூடி வேடிக்கை பார்ப்பது வழக்கம். மாணவர்கள் தொடர் தற்கொலை செய்து கொண்டாலும் அதை பற்றி பேசமாட்டார்கள் தமிழக ஊடகங்கள்.
புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் பணி புரியும் அநேகமானவர் பெரியாரின் கொள்கைகொண்டவர்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் எதாவது நடக்கிறதா அதை வைத்து இன்றைய விவாதம் நடத்தலாம் என கார்த்திகை செல்வன் போன்றோர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
திமுக இரண்டு எம்.பி. மீது கொலைவழக்கு பதியப்பட்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைமறைவானார்கள். அதில் ஒருவர் நேற்று கோர்ட்டில் ஆஜரானார் இதை பற்றியெல்லலாம் வாய் திறக்காமல் வாயை பொத்தி கொண்டு அதிமுக பொன்விழா பற்றி விவாதம் நடத்தினார்கள். தமிழக ஊடகங்கள்.
உத்திர பிரேதேசத்தில் சில மாதங்களுக்கு முன் ரவுடி விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள். இது குறித்து புதிய தலைமுறையின் டெல்லி ரிப்போட்டர் நிரஞ்சன்குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில்
8 போலீசார் சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் தூபே மற்றும் அவனது கும்பலை கடந்த இரண்டு நாட்களில் சுட்டுக்கொன்றது உத்ரபிரதேஷ் போலீஸ் கேங்ஸ்டருக்கும் காவல்துறைக்கும் என்ன வித்தியாசம் இருக்கு அருங்காட்சியமாக சட்ட புத்தகத்தை அலமாரியில் வைத்து மூடி விடலாம்
என காவல்துறை என்கவுன்டரை விமரிசித்து பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடந்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அங்கங்கே கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளின் அட்டகாசம் என தமிழகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. தினம் தோறும் கொலை நடுரோட்டில் தலையை வெட்டி கொலை என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கொலை செய்பவர்களை விட்டு கொள்ளையர்களை என்கவுன்டர் செய்துள்ளார்கள். தமிழக காவல்துறை. இதை பாராட்டி
புதிய தலைமுறையின் டெல்லி ரிப்போட்டர் நிரஞ்சன்குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில்
காஞ்சிபுரத்தில் துப்பாக்கி காட்டி கொள்ளையில் ஈடுப்பட்ட வடமாநில கொள்ளையன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
டெல்லி,உபி,பீகார் போலீஸ்ன்னு நினைச்சுட்டாய்ங்க தமிழ்நாடு போலீஸ, ஆயிரம் விமர்சனம் இருக்கலாம்,ஆனா இதுல எல்லாம் கில்லி
இப்போ எடுக்கிற நடவடிக்கையில இனி ஒரு பய வரக்கூடாது
என பதிவிட்டிருந்தார். இது குறித்து நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















