கடந்த வாரம் புதிய கல்வி கொள்கை முறை அமலுக்கு வந்தது. இந்த கல்வி முறை இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழகத்தில் இதை திராவிட கட்சிகள் எதிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் அரசியல் விமர்சகர் புதிய கல்வி கொள்கை குறித்து தந்து கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது :
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல துறைகளின் ஆகப்பெரும் ”பணக்கார” பிரபலங்கள் ஒவ்வொருவரும்’ தங்களுடைய குழந்தைகள், பேரக்குழந்தைகள் எல்லாம் தமிழகத்தில் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் ?”’வேறுமாநிலத்தில் எனில்.அங்குள்ள எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் ?”
வெளிநாடுகளில் படிக்கிறார்கள் எனில்.. ஏன் வெளிநாடுகளில் படிக்கிறார்கள் ?”
போன்றவற்றை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்துவிட்டு .அதன்பிறகு எதிர்ப்பு தெரிவிப்பதே சரியானது .
ஏழைக்கு ஒரு வகை கல்வி, மத்திய வகுப்புக்கு ஒரு வகை கல்வி , பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி, மகா பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி.என்று வகை பிரித்து இங்கு கல்வி விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.என்பது தான் .யாராலும் மறுக்க இயலாத இங்குள்ள கள எதார்த்தம்.
இதுபோல் பல்வேறு அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் புதிய கல்வி கொள்கை க்கு வரவேற்பு அளித்து வருகின்ற நிலையில் திமுக அதிமுக போன்ற கட்சிகள் இதை எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பிவருகிறார்கள் . மேலும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பள்ளி கல்லூரிகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் மகள் நடத்தும் சன் சைன் ஸ்கூல் இந்தி கற்று தருவதில்லையா ? என்ற கேள்வியும் மேலோங்கி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















