- 2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- பள்ளிக்குச் செல்லாத 2 கோடி குழந்தைகளுக்கு கல்வியை வழங்கவும் புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.
- அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணிதப் பாடத்துடன், 6-ம் வகுப்பிலிருந்தே தொழிற்கல்வி வழங்கவும், பணியாற்றுவதற்கான செயல்முறை பயிற்சியை வழங்கவும் புதிய கல்விக் கொள்கை வகைசெய்கிறது.
- பள்ளிப் படிப்பிலேயே மாணவனின் ஒட்டுமொத்த திறன் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மதிப்பீட்டு அட்டை முறை கொண்டுவரப்படவுள்ளது.
- குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
- உயர்கல்வியிலும் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
2035-ம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 50% உயர்த்துவதற்கும், இதற்காக 3.50 கோடி இடங்களை கூடுதலாக உருவாக்கவும் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்துகிறது. - ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்படும்.
- கல்லூரிகளில், செயல்திறனுக்கு ஏற்ப தரம்வாரியாக தன்னாட்சி வழங்கும்வரை கொண்டுவரப்பட்டு, பல்கலைக் கழகங்களுடன் கல்லூரிகள் இணைந்து செயல்படும் வரை படிப்படியாக அகற்றப்படும்.
- தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு ஒன்றை உருவாக்கவும், கல்வியில் சமச்சீரான தொழில்நுட்பத்தை அதிகரிக்கவும் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
- நாட்டின் பின்தங்கிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு சிறப்பு கல்வி மண்டலத்தை உருவாக்கவும் தேசிய கல்விக் கொள்கை வகை செய்கிறது.
- 34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- உயர்கல்வியில் M.Phil பாடப்பிரிவு ரத்து செய்யப்படும்.
- பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
- ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தரம் நிர்ணயிக்கப்படும்.
- பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்ட சுமை குறைக்கப்படும்.
- தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கிய படைப்புகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
- பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தொழில்திறன் கிடைப்பது உறுதி செய்யப்படும்.