வரும் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேலைகளை அனைத்து கட்சிகளுமே இறங்கி உள்ளது. மத்தியில் பலமாக உள்ள பா.ஜ.கவை எதிர்க்க பல கட்சிகள் ஒன்றிணைந்து இண்டி கூட்டணியை உருவாக்கியது. ஆனால் அந்த கூட்டணி தற்போது உள்ளதா என்பது அவர்களுக்கே தெரியவில்லை.இண்டி கூட்டணியில் பல கட்சிகள் வெளியேறி விட்டன.பல மாநிலங்களில் இண்டி கூட்டணி இல்லை என ஒரே குழப்ப கூட்டணியாக மாறியுள்ளது இண்டி கூட்டணி.
இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ‛மூட் ஆப் தி நேஷன்’ என்ற தலைப்பில் ‛இந்தியா டுடே’ மற்றும் ‛ சி வோட்டர்ஸ்’ இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறது. இதன்படி கடந்த ஆண்டு டிச.,15 முதல் 2024 ஜன.,28 வரை 35,801 பேரிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதன்படி முடிவுகள் வெளியானது சி-வோட்டர்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
இதே போல் புதிய தலைமுறை – தி ஃபெடரல் இணைந்து நடத்திய மெகா கருத்துக்கணிப்பு 2024 என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறார்கள்.நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி தான் முன்னணியில் உள்ளார். இது குறித்த முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்த கருத்துக்கணிப்புகள் குறித்து புதிய தலைமுறை நேரலையில் சபீர், சுமந்த் ராமன. மற்றும் கருத்து கணிப்பு நடத்திய APT நிறுவனத்தை சேர்ந்த ரகுராம் பங்கேற்றார்கள். அப்போது எதிர்வரும் மக்களவை தேர்தலில் எதை மையப்படுத்தி வக்காளீப்பீர்கள் என்ற கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டது. வேலைவாய்ப்பு விலைவாசி குறித்த கேள்விகள் மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. . அதுமட்டுமில்லாமல் பிரதமாராக மோடி தொடர வேண்டுமா? என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துகணிப்பின் முடிவுகள் குறித்து தான் நேரலையில் விவாதம் செய்யப்பட்டது. பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக கருத்து கணிப்பின் முடிவுகள் இருந்ததால் அதை ஷபீர் மற்றும் சுமந்த் ராமனால் ஏற்று கொள்ளமுடியவில்லை. மேலும் விவாதத்தில் இடையே மறித்த சுமந்த் ராமன் எதற்காக மோடி குறித்து கேள்வியை முன்வைத்தீர்கள் என கேள்வியை எழுப்பினார். இதை தொடர்ந்து ஷபீர் கருத்து கணிப்பு நடத்தியவரிடம் நீங்கள் ஏன் வேலைவாய்ப்பு,விலைவாசி, என கேள்விகளை முன்வைக்கும்போது பிரதமர் மோடி குறித்து மக்களிடம் கருத்து கேட்டீர்கள் என விவாதத்தில் ஈடுபட தொடங்கினார். அதற்கு கார்த்திகை செல்வனும் ஷபீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். பிரதமர் மோடி குறித்தான கேள்வியை தனியாக முன்வைத்திருக்கலாம் என கூறினார்.
அப்போது கருத்து கணிப்பை நடத்திய நிறுவனத்தை சேர்ந்த ரகுராம் அவர்கள். இந்த கேள்விகளோடு பிரதமர் சம்பந்தப்பட்டுள்ளார் அதனால் தான் வைத்தோம் மேலும் நீங்கள் கூறுவது போல் தனியாக பிரதமர் மோடி தொடரவேண்டுமா என கேட்டால் அதற்கு 60% மோடிக்கு ஆதரவாக தான் இருக்கும் என கூறி ஷபீர் மற்றும் சுமந்த் ராமன்க்கு பதிலடி கொடுத்து மூக்குடைத்தார். ரகுராம் கூறுகையில் நாங்கள் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை அப்படி செயல்படவும் மாட்டோம் என சுமந்த ராமன் மற்றும் கார்த்திகை செல்வன் ஷபீருக்கு பதிலடி கொடுத்தார்