இந்திய கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும், மற்றும் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் முக்கிய நிகழ்வை பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அக்டோபர் 11-ம்தேதி தொடங்கி வைக்கிறார்.
மொபைல் போன்கள் வழியே அனுப்பப்படும் குறுஞ்செய்தி இணைப்பின் வழியே சொத்து அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை, ஒரு லட்சம் சொத்து உடமையாளர்கள் பெறும் வசதி தொடங்கப்பட உள்ளது. அதன்பின் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் சொத்து அட்டைகள் நேரடியாக வழங்கப்படும். கர்நாடகாவில் 2, உத்தரகாண்ட்டில் 50, மத்தியபிரதேசத்தில் 44, மகாராஷ்டிராவில் 100, ஹரியாணாவில் 221, உத்தர பிரதேசத்தில் 346 என 6 மாநிலங்களின் 763 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தைத்தவிர மேற்குறிப்பிட்ட இதர மாநிலங்களைச் சேர்ந்த பயனாளிகள் ஒரு நாளுக்குள் சொத்து அட்டைகளை பெறுவார்கள். சொத்து அட்டைகள் வழங்க குறைந்த பட்சத்தொகையை வசூலிக்கும் ஒரு முறையை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளதால், இந்த திட்டம்அந்த மாநிலத்தில் தொடங்குவதற்கு ஒரு மாதம் ஆகும்.
கடன் பெறவோ அல்லது இதர நிதி பயன்பாடுகளுக்காகவோ கிராம மக்கள், தங்களது சொத்துகளை, ஒரு நிதி சொத்தாக உபயோகிப்பதற்கு இந்த நடவடிக்கை வழி வகுக்கும். தவிர, பல லட்சக்கணக்கிலான கிராம சொத்து உடமையாளர்கள் பயன் அடையும் வகையில் மிகவும் நவீன முறையிலான தொழில்நுட்பத்துடன் கூடிய இதுபோன்ற பெரிய அளவிலான நடைமுறை இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிகழ்வின்போது பிரதமர் சில பயனாளிகளுடன் உரையாட உள்ளார். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வு அக்டோபர் 11ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும். மேலும் இந்த டிஜிட்டல் பட்டா முறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்டுகிறது. ஏற்கனவே சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஆதார் அவசியம், இனி அனைத்தும் டிஜிட்டல் முறை என்றால் ஒரு பட்டனை அழுத்தினால் பொது நமது பெயரில் உள்ள அனைத்து சொத்து விவரங்களையும் கொண்டு சேர்த்துவிடும். இந்த டிஜிட்டல் முறையால் இந்தியா முழுவதும் பினாமி சொத்து சேர்ப்பது மிக கடினமாகி விடும்