நடுத்தர மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாகதிரையில் காட்டியவர் இயக்குநர் விசு. அவருக்கு சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிர் பிரிந்தது. இயக்குனர் விசுவிற்கு 3 மகள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
விசுவின் மரண செய்தி, திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்

இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ் அவரது மகள்கள் அமெரிக்காவில் வசிப்பதால் தற்போது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாது என செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால் விசுவின் மகள்கள் சென்னையில் தான் இருக்கின்றனர் என எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். பொய் செய்திகளை தொடர்ந்து வழங்கும் நியூஸ் 18 தமிழ் எப்போது திருந்தும் என தெரியவில்லை.