மத்திய பிரதேசத்தை அடுத்து பிஜேபியின் குறி மகாராஷ்டிராவா இல்லை ராஜஸ்தானா என்று ஊடகங்கள் விவாதித்து வருகின்றன இரண்டு ஆட்சியையும் கவிழ்க்க வாய்ப்புகள்
இருக்கிறது.
கூடவே ஜார்கண்ட்டிலும் வாய்ப்புகள் இருக்கிறது.
இருந்தாலும் முதல் சாய்ஸ் ராஜஸ்தானுக்கு தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஏனென்றால் மகாராஷ்டிரா ஜார்கண்ட்டில் பிஜேபியின் ராஜ்யசபா எம்பி பதவிக்கு எந்த
பிரச்சனையும் இல்லை.
ஆனால் ராஜஸ்தானில் பிஜேபி 2 ராஜ்யசபா எம்பிக்களை இழக்க இருக்கிறது.
அதாவது பிஜேபியை சார்ந்த 3 ராஜ்யசபா எம்பிக்களின் பதிவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவ
டைகிறது.ராஜஸ்தானில் 3 எம்பிக்களை பிஜேபி இழக்க உள்ள நிலையில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் இப்பொழுது உள்ள பிஜேபி எம்எல்ஏக்களை வைத்து பிஜேபியால் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பியை மட்டுமே மீண்டும் பெற முடியும்.
ஏனென்றால் ராஜஸ்தானில் ஒரு ராஜ்யசபா எம்பி வெற்றி பெற 51 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் பிஜேபிக்கு இப்பொழுது 75 எம்எல்ஏக்களின் ஆதரவு தான் இருக்கிறது.
என வே இரண்டு எம்பிக்களை பிஜேபி இழக்க இருக்கிறது.அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 119 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் 2 ராஜ்யசபா எம்பிக்களை பெற முடியும்.
அமித்ஷா விட்டு விடுவாரா? நிச்சயமாக விடமாட்டார். அதனால் எப்படியும் காங்கிரஸ் கட்சியில் கலகத்தை உருவாக்குவார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்கு 119 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தாலும் 100 எம்எல்ஏக்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் சொந்த எம்எல்ஏ க்கள்.
ஏனைய 19 எம்எல்ஏக்களில் 13 பேர் எம்எல்ஏ க்கள் 6 பேர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள்.
இதில் 6 பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏகள் காங்கிரசில் இணைந்து விட்டதால் அவர்களை இழுப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
அதே நேரத்தில் 13 சுயேச்சை மற்றும் 2 பாரதிய ட்ரைபல் பார்ட்டியின் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முடியும்.
சுயேச்சைகளில் அதிகமானோர் பிஜேபியில் டிக்கெட் கிடைக்காமல் பிஜேபியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தான் அதனால் அவர்களுக்கும் பிஜேபிக்கும் இடையே தொடர்பு இப்பொழுதும் இருந்து
கொண்டு தான் இருக்கிறது.
ஆக பிஜேபிக்கு 90 எம்எல்ஏக்களின் ஆதரவுகிடைத்து விடும். இப்பொழுது பிஜேபிக்கு இரண்டாவது எம்பி கிடைக்க வேண்டும் என்றால் இன்னும் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே தேவை .
இந்த 12 எம்எல்ஏக்களின் ஆதரவை
காங்கிரஸ் கட்சியில் இருந்தே பெறமுடியும்.
மத்திய பிரதேம் மாதிரி 15-20 காங்கிரஸ் எம்எல்ஏக்களை பிஜேபி இழுத்தாலோ போதும் பிஜேபிக்கு 2 வது ராஜ்யசபா எம்பி உறுதியாகி விடும். கூடவே ராஜஸ்தான் ஆட்சியும் கலைந்து விடும்.இதற்கு சச்சின் பைலட் துணையாக இருப்பார் என்று கூறுகிறார்கள்.
மத்திய பிரதேசம் மாதிரியே ராஜஸ்தானிலும் பெரிசுக்கும் சிறிசுக்கும் இடையே மோதல் இருந்துகொண்டே இருக்கிறது. அதாவது பெரிசு முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணைமுதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
ராஜஸ்தானிலும் மத்திய பிரதேம் மாதிரியே நூலிழை பெரும்பான்மையில் தான் காங்கிரஸ் ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனால் அங்கே ஈசியாக ஆட்சியை கவிழ்த்துவிடலாம்.என்று பிஜேபி கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகிறது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அசோக் கெலாட்டின் பையன் வைபவ் கெலாட் ஜோத்பூர் லோக்சபா தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு சச்சின் பைலட் தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று பெரிசு அசோக்கெலாட் பொது மேடையிலேயே கூறி சச்சின் பைலட்டை வம்புக்கு இழுத்தார்.
சச்சின் பைலட்டுக்கும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கும் இது தாங்க வித்தியாசம்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்தை பார்த்து என்னை தோற்கடித்ததுநீங்கள் தான் என்று ஜோதிர் ஆதித்யா கூறினார்.
ஆனால் ராஜஸ்தானிலோ அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட முதல்வர் அசோக் கெலாட் சுள்ளான் சச்சின் பைலட்டை
பார்த்து நீ தான் என் மகன் தோல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறினார்.
பலமாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்து வந்துள்ள அசோக் கெலாட் ஒரு சின்ன பையனை பார்த்து என் மகனை நீ தான் தோற்கடித்து விட்டாய் என்று கூறியது ஆச்சரியம் தான்.
இதில் இருந்தே ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் யார் கை ஓங்கி இருக்கிறது என்று
அறிந்து கொள்ளலாம்.
ஜோதிர் ஆதித்யா மாதிரி சச்சின் பைலட் காங்கிரசை விட்டு ஓடமாட்டார். அசோக் கெலாட்டை தான் ஒட விடுவார் அந்த அளவுக்கு அரசியல் தெளிவு சச்சின் பைலட்டுக்கு இருக்கிறது.
ஒரு வேளை சச்சின் பைலட்டை வைத்து பி ஜேபி ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை
கவிழ்க்க நினைத்தால் ராஜஸ்தான் முதல்வராக வசந்திரா ராஜே சிந்தியா இருக்க மாட்டார் சச்சின் பைலட்டாகவே இருப்பார்.
அந்த அளவுக்கு தெளிவான ஆளாக இருக்கிறார் சச்சி ன் பைலட்.
பெயரிலேயே சச்சின் இருப்பதால்
என்னவோ நம்ம சச்சின் டெண்டுல்கர் மாதிரி
படுசுயநலம் பக்கா காரியக்காரர்.
எனவே மத்திய பிரதேசம் மாதிரி ஒரு சிறிய ஆபரேசன் லோட்டஸ் திட்டத்தை செயல் படுத்தினாலோ போதும் ராஜஸ்தானிலும் பிஜேபி
ஆட்சி ஆட்சிக்கு வந்து விடும். இதையெல்லாம் நாம் எடுத்து கூற வேண்டிய அவசியம் தேவையில்லை.
ஏனென்றால் இதையெல்லாம் செய்படுத்த வேண்டியது தான் பாக்கி.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்த அடுத்த நொடியே காங்கி
ரஸ் கட்சியில் கலகம் உருவாகி விடும்.
அது ராஜஸ்தானிலும் ஆட்சி கவிழ்ப்பை நோக்கி கொண்டு செல்லும்.
அதே மாதிரி பிஜேபி 2 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது என்று செய்தி வந்தவுடன் ராஜஸ்தானிலும் ஆட்சி கவிழ்ந்து விட்டது என்று உறுதியாக கூறலாம்.
விரைவில் காட்சி மாற்றம் மற்றும் ஆட்சி மாற்றம் காண்போம்.
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.