கடந்த 2014 மே 26-ம் தேதி பாரத நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற திரு. நரேந்திர மோடி அவர்கள் தீர்க்கவே முடியாது என்று சொல்லப்பட்ட பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மகத்தான சாதனை படைத்து வருகிறார். அதில் மிக முக்கியமானது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது.
இந்தியாவிலேயே பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாத மாநிலம் ஜம்மு – காஷ்மீர் மட்டுமே. பெண்களுக்கான உரிமையும் அங்கு இல்லை.பல்வேறு மதங்கள், இனங்களைக் கொண்ட மக்கள் வாழ்ந்தாலும் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வெற்றி பெறும் வகையில் உருவாக்கப்பட்டன.
அதற்கு முடிவு கட்டவே கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா கொண்டு வந்த சட்டம் மூலம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மூர் மாநிலம், ஜம்மு – காஷ்மீர், லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
மேலும் அங்கு தீவிரவாதிகள் களை எடுக்கப்பட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அனைவரையும் தட்டி தூக்கி வருகிறார்கள் என்.ஐ.ஏ. அமைப்பினர்.
இந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜமாத்- இ -இஸ்லாமி அமைப்புடன் தொடர்பு உடையோர் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 56 க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையில் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்தது தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ சாதனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.மேலும் சோதனை நடந்து வருகிறது.