கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு இருவர் பலியான நிலையில், அங்கு மீண்டும் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கடந்த 2018ல் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 17 பேர் பலியாகினர். அதன்பின் நோயின் தாக்கம் குறைந்தது. தற்போது மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு இருவர் பலியானதை அடுத்து மேலும் நான்கு பேர் ‘நிபா’ வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இறந்தவர்களின் ரத்த மாதிரிகள் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஆய்வகத்தில் நடத்திய பரிசோதனையில் நிபா உறுதி செய்யப்பட்டதாகவும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்தார்.