Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக ஆய்வு மேற்கொள்கிறார் நிர்மலா சீதாராமன்!

Oredesam by Oredesam
July 23, 2020
in இந்தியா, செய்திகள்
0
இலவச மின்சாரத்தில் நடக்கும் முறைகேடுகள் ! அமைச்சர் நிர்மலா சீத்தராமன் விளக்கதின் பின்னணி என்ன ?
FacebookTwitterWhatsappTelegram

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம் திட்டத்தின் (SWAMIH) செயல்பாடு குறித்து மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காணொளி மூலம் ஆய்வு செய்தார். நிதி அமைச்சகத் துறைகளின் செயலாளர்கள்,  பாரத ஸ்டேட் வங்கி, எஸ்.பி.ஐ. கேப்பிட்டல் மார்க்கெட் லிமிடெட் மற்றும் SBICAPS வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ரூ.8767 கோடி மதிப்பிலான 81 திட்டங்களுக்கு இந்த நிதியத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

SWAMIH முதலீட்டு நிதியம் – I  திட்டம் கொள்கை அறிவிப்பு நிலையில் இருந்து, கள அளவில் செயல்படும் திட்டமாக முன்னேற்றம் கண்டுள்ளது. நாடு முழுக்க 60 ஆயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பதற்கான 81 திட்டங்களுக்கு அதில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என்.சி.ஆர்., எம்.எம்.ஆர். பிராந்தியங்கள், பெங்களூரு, சென்னை, புனே போன்ற பெரிய நகரங்கள், இரண்டாம் நிலையாகக் கருதப்படும் கர்னல், பானிப்பட், லக்னோ, சூரத், டேராடூன், கோட்டா, நாக்பூர், ஜெய்ப்பூர், நாசிக், விசாகப்பட்டினம், சண்டீகர் போன்ற (பிற்சேர்க்கை 1) நகரங்கள் என பரவலாக இத் திட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 18 திட்டங்களில் முதலீடு செய்ய இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏழு குடியிருப்புத் திட்டங்களுக்கு (பிற்சேர்க்கை 2) பல்வேறு நிலைகளில் பணம் அளிக்கப்பட்டுள்ளது. சிக்கலில் இருக்கும் 353 திட்டங்கள் குறித்து விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. அவற்றுக்கு உதவி அளிப்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. இந்த கட்டுமானத் தலங்களின் திட்டங்களை விசேஷ அனுமதி சாளரம் திட்டத்தின் மூலம் மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் ஏராளமான தொழில் திறன் பெற்ற மற்றும் ஓரளவு தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்  என்று ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வீட்டுவசதித் திட்டங்களில், வீடுகள் வாங்கியவர்களில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சுமார் 15 ஆயிரம் பேருக்கு நிவாரணம் அளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் இந்த நிதியம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

சிறப்பு அனுமதி சாளரம் திட்டத்தின் செயல்பாடு பற்றி ஆய்வு மேற்கொண்ட நிதியமைச்சர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்காகப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். மூலதனத்துக்கான வட்டியை சமீபத்தில் 12 சதவீதமாக நிதியம் குறைத்த காரணத்தால், திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறப்பு அனுமதித் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளுக்கு தகுதிப் படுத்திக் கொள்வதாக இது அமைந்துள்ளது. தற்போது கடன் அளித்துள்ள நிறுவனங்களின் பங்கேற்பை விரைவுபடுத்துவதற்கு சிறப்பு அனுமதி சாளரத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய திருமதி சீதாராமன், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், வங்கிச் சேவையில் இல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள் ஆகியவை இந்த சிறப்புத் திட்டத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கருதி, சிக்கலில் இருக்கும் திட்டங்களின் பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திட்டத்தில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து நிதியமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. திட்டத்தின் முன்னேற்றத்துக்கு ஏற்ப முதலீடுகளை சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகவும் இந்தக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இருக்கும். திட்டத்துக்கான பணம் கிடைப்பது, வேறு வகையில் பணம் திசை மாற்றி செலவிடப்படாமல் தடுப்பது ஆகிய விஷயங்களில் பொறுப்பேற்பு நிலை மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

SWAMIH  முதலீட்டு நிதியம் – I – இன் செயல்பாடுகளைக் கூர்ந்து கண்காணிக்குமாறு பொருளாதார விவகாரங்கள் துறையை நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்த நிதியம் திரட்டிய பணம், சிக்கலில் உள்ள திட்டங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், இதில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கும் பயன்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இறுதிநிலை நிதி ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று திருமதி சீதாராமன் விருப்பம் தெரிவித்தார். வீடுகள் வாங்கியவர்களுக்கு உதவும் வகையில், அவற்றுக்கு இப்போது கடன் அளித்துள்ள நிறுவனங்களின் தீவிர ஆதரவுடன், இந்த நிதியத்தின் சிறப்பு ஒதுக்கீட்டுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ரியல் எஸ்டேட் துறைக்கு அசாத்தியமான ஆதரவு அளிக்கும் வகையிலான முன் எப்போதும் இல்லாத முன்முயற்சியாக இந்த சிறப்பு அனுமதி சாளரம் திட்டம் உள்ளது என்று கூறிய அமைச்சர், பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதாக இது இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கோடி கோடியாக சம்பாதித்தது உண்மை ! தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!

தேர்தல் நேர வாக்குறுதியை காப்பாற்ற வழியில்லை! வெள்ளை அறிக்கை மூலம் வேடிக்கை காட்ட முயற்சி!!

August 10, 2021
பஞ்சாப் அரசியலை திருப்பி போட்ட சம்பவம்.. அடுத்த ஆட்சி பா.ஜ.க தான்… விவசாய சங்க தலைவர் எடுத்த முடிவு!

பஞ்சாப் அரசியலை திருப்பி போட்ட சம்பவம்.. அடுத்த ஆட்சி பா.ஜ.க தான்… விவசாய சங்க தலைவர் எடுத்த முடிவு!

December 20, 2021
சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததை கைகட்டி வேடிக்கை பார்த்த கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள் !

சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததை கைகட்டி வேடிக்கை பார்த்த கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள் !

December 18, 2021
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x