நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து திமுக உறுப்பினர்கள் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் பற்றியும் தி.மு.க எம்பி கனிமொழி பேசுகையில், இந்தி திணிப்பதைவிட சிலப்பதிகாரத்தை படியுங்கள் செங்கோல் பற்றியும் அதேபோல திரெளபதி கதை குறித்தும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்
இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமான் பதிலளிக்கையில் : திமுக எம்.பி மதுரை – எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். 1,977 கோடி ரூபாயில் மத்திய அரசின் செலவில் கட்டப்படும். தமிழக அரசுக்கு இதனால் எந்தவித கடன் சுமையும் இல்லை. அதனால், அவை உறுப்பினர்கள் தவறான கருத்துகளைப் பரப்ப வேண்டாம். மொத்தம் 950 படுக்கை வசதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைகிறது. ஆகையால், தமிழகம் இதில் கவலைகொள்ள வேண்டாம். இது, மத்திய அரசின் சுமை.
நாங்கள் மருத்துவமனை கட்டுவோம் என சொன்னதும், எப்போது என கேள்வி எழுப்புகிறார்கள். மதுரை – எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதமானது. அதனால், மருத்துவமனைக் கட்டுமான பணி செலவும் கூடியது. இதற்கு மாநில அரசுதான் பொறுப்பு. இதற்கு கரோனா தொற்றுப் பரவலும் ஒரு காரணம். என கூறினார்.
தி.மு.கவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியை அதிரடியாக கொடுத்து வந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பேச்சில் அனல் பறந்தது. மத்திய அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே திமுக எம்.பிகள் எஸ்கேப் ஆக ஆரம்பித்தார்கள். அவர்களை பார்த்து நிர்மலா சீதாராமன் உட்காருங்கள் தமிழகத்தை பற்றி பேச நிறைய உள்ளது… போனாலும் டீ.வி.யில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறினார்.
சிலப்பதிகாரம் பற்றி கனிமொழி பேசிய பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிலப்பதிகாரம் குறித்து நான் கூறுகிறேன். மயிலை பொன்னுசாமி சிவஞானம். சிலம்பு செல்வர் என்ற பெயர் கொண்டவர் சிலப்பதிகாரத்துக்கான அத்தாரிட்டியே அவர் தான். சிலப்பதிகாரம் படிக்க வேண்டும் என கனிமொழி கூறியாதல் நான் இதை சொல்கிறேன்.
மா.பொ.சி கடந்த 1951ல் தமிழ் முரசில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம் நாம் திராவிடர் அல்லர். தமிழர். நமது தாயகத்தின் பெயர் திராவிடம் அன்று தமிழகம். அதன் வடக்கு எல்லை விந்தியம் அன்று வேங்கடம். தமிழ்நாட்டில் அந்தணர் ஆரியர் அல்லர் தமிழர். தமிழருடைய பண்பாடும், பழக்க வழக்கங்களுக்கும் பெரும்பாலும் வேங்கடத்துக்கு வெளியே உள்ளவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கும், வேறானவை ஆயினும் விரோதமானது அல்ல என்று சிலப்பதிகாரம் கூறுவதாக பதிலடி கொடுத்தார்.
‛ஒரே பாரதம் உன்னத பாரதம்’ மூலம் சிலப்பதிகாரம் குறித்து மாபொசி சொன்னதை தான் பிரதமர் மோடி செயல்படுத்தி உள்ளார். இது தமிழ்நாட்டில் அனைவருக்கும் புரியும். இருப்பினும் நாங்கள் அரசியல் செய்ய விரும்புகிறோம். உண்மையை சொல்ல விரும்பவில்லை. அதாவது பல மொழிகள் இருப்பினும் வேறுபாடு இல்லை. ஒரே நாடு என்பதை தான் பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் மோடிக்கும் சிலப்பதிகாரம் படிக்கிறார்” என கூறியுள்ளார்.
செங்கோல் குறித்து பேசுகையில், காங்கிரஸ்தான் செங்கோலை தூக்கி எறிந்து மூலையில் போட்டது.அதை ஒரு தடியாக பயன்படுத்தியது காங்கிரஸ் அரசு. செங்கோலை மீட்டு உரிய இடத்தில் வைத்து மரியாதையை கொடுத்துள்ளவர் பிரதமர் மோடி
தமிழர் பாரம்பரியம், பண்பாடு தொடர்பாக கூறுகையில் காசி தமிழ் சங்கமம், தமிழர் புத்தாண்டு கொண்டாட்டங்களை சுட்டிக்காட்டினார். மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காட்டு மிராண்டித்தனம் என சொல்லி தடை செய்தது காங்கிரஸ்; அதனை மீட்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்றார்.
கனிமொழி இந்த அவையில் மகாபாரதத்தில் இருந்து திரௌபதியைப் பற்றி பேசினார். ஆம், மகாபாரதத்தில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்டார். நான் மறுக்கவில்லை. பெண்களை பொறுத்தவரையில், மோசமாக அவர்கள் நடத்தப்படுவதும் தவறாக விமர்சிக்கப்படுவதும் எங்கள் ஒவ்வொருவருக்கும் வலியையே தருகிறது. இந்த அவைக்கும் கனிமொழிக்கும் நான் ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன். அதுவும், புனிதமான தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த மார்ச் 25, 1989-ல் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன்.
அன்றைய தினம் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் சேலை அங்கிருந்தவர்களால் இழுக்கப்பட்டது. அப்போது அதை பார்த்துக்கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள், அவரைப்பார்த்து சிரித்தனர்… நகைத்தனர்! அப்படியான நீங்கள், இன்று கௌரவ சபா பற்றி பேசுகிறீர்கள்?! நீங்கள் திரௌபதி பற்றி பேசுகிறீர்கள்?! திமுக, ஜெயலலிதாவை மறந்துவிட்டதா? நீங்கள்தானே ஜெயலலிதாவை அவமதித்தீர்கள். உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என திமுகவை ஆதாரங்களோடு வெளுத்து வாங்கி விட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
இதை தொடர்ந்து திமுக எம்பிக்கள் வெளியேற முற்பட்ட போது குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டை பத்தி நிறைய சொல்லனும் ஓடாதீங்க. இருந்து கேளுங்க என்று நிர்மலா சீத்ராமன் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















